சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!
Updated on : 23 September 2025

'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.



 



டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது.  நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள்.  தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள்.  ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது. இதனால், இருவரும் திரைப்படம் எடுப்பதை விட அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.  



 



பரபரப்பு, அட்வென்ச்சர், நகைச்சுவை, ஆக்‌ஷன் என பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என 'அனகோண்டா' உறுதியளிக்கிறது. 



 



இந்தப் படத்தில் ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர் மற்றும் செல்டன் மெல்லோ ஆகியோரும் நடித்துள்ளனர். பிராட் புல்லர், ஆண்ட்ரூ ஃபார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோர் 'அனகோண்டா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். 



 



இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா டிசம்பர் 25, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'அனகோண்டா' திரைப்படத்தை வெளியிடுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா