சற்று முன்

'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!
Updated on : 08 October 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி  K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.



 



தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது.



 



“இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K. கணேஷ் கூறியுள்ளார்.., மேலும் “உலக இசைத்துறையில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும். தமிழ்த் திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை  உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும். மேலும் எனது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தை தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். 



 





வேல்ஸ் விஷன் – விரிவடைந்த புதிய பாதை



டாக்டர் ஐசரி  K. கணேஷ் தலைமையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கீழ்கண்ட துறைகளில் விரிவடைந்து வருகிறது:



 



திரைப்பட தயாரிப்பு – முன்னணி நட்சத்திரங்களுடன்,  பல பிரம்மாண்ட தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளன.



 



வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் –



 பாடல்கள், சிங்கிள்ஸ் மற்றும் இண்டிபெண்டண்ட் ரிலீஸ்களுக்கான தனித்த இசை பிரிவு.



வேல்ஸ் ஃபிலிம் சிட்டி – EVP ஸ்டூடியோசை தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், பல்லாவரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இன்டோர் ஷூட்டிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது. 130 ஏக்கர் பரப்பளவில் 20 ஸ்டூடியோஸ், 6 திரையரங்குகள், ஹோட்டல் வசதிகள் மற்றும் சென்னை நகரின் மிகப்பெரிய கண்காட்சி மையம் ஆகியவை உள்ளன.



 



வேல்ஸ் போஸ்ட் (Vels Post) – விரைவில் துவங்கவிருக்கும் புதிய போஸ்ட் புரொடக்சன் மையம். இதில் எடிட்டிங், DI, கலர் கிரேடிங், VFX, சவுண்ட் டிசைன், மற்றும் மாஸ்டரிங் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.





வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் வெளியிடவிருக்கும் முக்கிய திரைப்படங்கள்



D54 – தனுஷ் & விக்னேஷ் ராஜா

மூக்குத்தி அம்மன் 2 – சுந்தர் சி & நயன்தாரா

D56 – தனுஷ் & மாரி செல்வராஜ்

வடசென்னை 2 – தனுஷ் & வெற்றிமாறன்

கட்டா குஸ்தி 2 – விஷ்ணு விஷால் & செல்லையா

FAFA – ஃபஹத் ஃபாசில் & பிரேம் குமார்

டயங்கரம்  – விஜே சித்து





தமிழ் இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைப்பு



ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சித்து குமார், கோவிந்த் வசந்தா, ஷான் ரோல்டன் ஆகிய பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து புது தலைமுறை தமிழ் இசை திறமைகளை உருவாக்கவிருக்கிறது.





இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்கள் மற்றும் சர்வதேச வரம்பு



வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல், இண்டிபெண்டண்ட் பாடகர்கள், க்ராஸ்-ஜானர் கலைஞர்கள் மற்றும் புதிய இசை திறமைகளுடன்  இணைந்து பணியாற்றும். மேலும், பிற தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ஆல்பங்கள் வாங்கி தன் பட்டியலில் சேர்த்து, உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களில் தமிழ் இசையை பரப்பவிருக்கிறது.





வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் 

 பற்றி



டாக்டர் ஐசரி K. கணேஷ் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னணி பப்ளிக் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள், இசை, போஸ்ட் புரொடக்சன், கல்வி மற்றும் ஸ்டூடியோ உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பரந்து விரிந்துள்ளது. படைப்பாற்றல், புதுமை மற்றும் வணிக அளவில் வளர்ச்சி மூலம் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா