சற்று முன்
சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!
Updated on : 08 October 2025

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க, கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய செய்திகள்
நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'ஹாய்' (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்
அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்' முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
நயன்தாராவும், கவினும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஐசரி K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது.
“இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K. கணேஷ் கூறியுள்ளார்.., மேலும் “உலக இசைத்துறையில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும். தமிழ்த் திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும். மேலும் எனது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தை தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
⸻
வேல்ஸ் விஷன் – விரிவடைந்த புதிய பாதை
டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கீழ்கண்ட துறைகளில் விரிவடைந்து வருகிறது:
திரைப்பட தயாரிப்பு – முன்னணி நட்சத்திரங்களுடன், பல பிரம்மாண்ட தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளன.
வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் –
பாடல்கள், சிங்கிள்ஸ் மற்றும் இண்டிபெண்டண்ட் ரிலீஸ்களுக்கான தனித்த இசை பிரிவு.
வேல்ஸ் ஃபிலிம் சிட்டி – EVP ஸ்டூடியோசை தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், பல்லாவரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இன்டோர் ஷூட்டிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது. 130 ஏக்கர் பரப்பளவில் 20 ஸ்டூடியோஸ், 6 திரையரங்குகள், ஹோட்டல் வசதிகள் மற்றும் சென்னை நகரின் மிகப்பெரிய கண்காட்சி மையம் ஆகியவை உள்ளன.
வேல்ஸ் போஸ்ட் (Vels Post) – விரைவில் துவங்கவிருக்கும் புதிய போஸ்ட் புரொடக்சன் மையம். இதில் எடிட்டிங், DI, கலர் கிரேடிங், VFX, சவுண்ட் டிசைன், மற்றும் மாஸ்டரிங் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
⸻
வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் வெளியிடவிருக்கும் முக்கிய திரைப்படங்கள்
D54 – தனுஷ் & விக்னேஷ் ராஜா
மூக்குத்தி அம்மன் 2 – சுந்தர் சி & நயன்தாரா
D56 – தனுஷ் & மாரி செல்வராஜ்
வடசென்னை 2 – தனுஷ் & வெற்றிமாறன்
கட்டா குஸ்தி 2 – விஷ்ணு விஷால் & செல்லையா
FAFA – ஃபஹத் ஃபாசில் & பிரேம் குமார்
டயங்கரம் – விஜே சித்து
⸻
தமிழ் இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைப்பு
ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சித்து குமார், கோவிந்த் வசந்தா, ஷான் ரோல்டன் ஆகிய பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து புது தலைமுறை தமிழ் இசை திறமைகளை உருவாக்கவிருக்கிறது.
⸻
இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்கள் மற்றும் சர்வதேச வரம்பு
வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல், இண்டிபெண்டண்ட் பாடகர்கள், க்ராஸ்-ஜானர் கலைஞர்கள் மற்றும் புதிய இசை திறமைகளுடன் இணைந்து பணியாற்றும். மேலும், பிற தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ஆல்பங்கள் வாங்கி தன் பட்டியலில் சேர்த்து, உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களில் தமிழ் இசையை பரப்பவிருக்கிறது.
⸻
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்
பற்றி
டாக்டர் ஐசரி K. கணேஷ் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னணி பப்ளிக் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள், இசை, போஸ்ட் புரொடக்சன், கல்வி மற்றும் ஸ்டூடியோ உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பரந்து விரிந்துள்ளது. படைப்பாற்றல், புதுமை மற்றும் வணிக அளவில் வளர்ச்சி மூலம் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லவுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!
MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.
நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.
பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.
பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் பட டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் பிரவீன்.கே பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் மேலும் இந்த படம் பற்றிய பாலிவுட் நடிகர் அமீர்கானின் பகிர்வுகளையும் பகிர்ந்தனர்.
இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், ஏற்கனவே “’கட்டா குஸ்தி’ படம் பற்றி அமீர்கான் சாரிடம் பேசியிருந்தேன், அப்போது மும்பைக்கு வேறு ஒரு வேலையாக சென்ற போது அவரை சந்தித்தேன், ’கட்டா குஸ்தி’ எப்படி போனது, என்று விசாரித்தவர், தற்போது என்ன படம் போய்க்கொண்டிருக்கிறது, என்றார். நான் ஆர்யன் படம் பற்றி சொன்னேன், பிறகு அதன் ஒன்லைன் கேட்டார், அதை சொன்னேன். அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை உடனே, ”கதை கேட்கலாமா” என்று கேட்டார். நானும் ப்ரவீனும் கதை சொன்னோம், அவருக்கு பிடித்துவிட்டது. உடனே ”இந்த படத்தை இந்தியிலும் எடுக்கலாம், வில்லனாக நான் நடிக்கிறேன், ஹீரோவாக நீங்க நடிங்க” என்று கூறினார். ஆனால், சில காரணங்களினால் அது நடக்காமல் போய்விட்டது. ஆனால், அமீர்கான் சாரையே இந்த கதை கவர்ந்ததால் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இப்போது படம் முடிந்துவிட்டது, படத்தை பார்த்த பலரும் வியந்து பாராட்டுவதோடு, வெற்றி நிச்சயம், என்றும் சொல்கிறார்கள்.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
சைக்கோ திரில்லர் படம் என்றால் ‘ராட்சசன்’ தான் நினைவுக்கு வரும், ஆனால் அந்த படம் போல் இது இருக்காது. சைக்கோ திரில்லர் படங்கள் என்றாலே பார்வையாளர்கள் மனதில் ஒரு கதை ஓடும், அந்த கதை இந்த படத்தில் இருக்காது, அது தான் இந்த படத்தின் சிறப்பு. பொதுவாக என் படத்தில் எதாவது ஒரு ஸ்பெஷல் விசயங்கள் மறைக்கப்பட்டிருக்கும், படம் வெளியாகும் போது தான் அது தெரியும். அதுபோல் இந்த படத்தில் வில்லன் செல்வராகவன் என்பதை சொல்லிவிட்டாலும், அவர் எப்படிப்பட்ட வில்லத்தனத்தை செய்கிறார், என்பது தான் படத்தின் சிறப்பு, அது இதுவரை பார்த்திராத விசயமாக இருக்கும்.
செல்வராகவன் பல படங்களில் வில்லனாக நடித்து விட்டாரே, இதில் என்ன புதிதாக பண்ணப் போகிறார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பிரவீன்.கே, “இந்த படத்திற்காக நாங்கள் செல்வராகவன் சாரை அணுகும் போது அவர் பெரிதாக நடிக்கவில்லை. இந்த படத்தின் மூலம் தான் அவர் வில்லனாக அறிமுகமாக இருந்தார். ஆனால், இப்போது அவர் பல படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இருந்தாலும், மற்ற படங்களில் பார்க்கும் செல்வராகவனை இந்த படத்தில் பார்க்க மாட்டீர்கள்.” என்றார்.
படம் காலதாமதம் ஆனது ஏன் ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “இந்த படம் நிச்சயம் பண்ண வேண்டும் என்று இருந்தேன். அதே சமயம், சில படங்களுக்கு கொடுக்கப்பட்ட தேதிகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. பிறகு பொறுத்தது போதும் என்ற நிலையில், இந்த படத்தை முடித்த பிறகே மற்ற படங்களின் வேலைகளை பார்க்க வேண்டும், என்று முடிவு செய்து படப்பிடிப்பை முடித்து விட்டோம்.” என்றார்.
சைக்கோ திரில்லர் படம் என்றாலே அதற்கான ரசிகர்களை கவர்வதற்காக சில வன்மமான காட்சிகள் இருக்கும், இரத்தம் தெறிக்கும், அப்படி தான் இந்த படமும் இருக்குமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷ்ணு விஷால், “என் படங்களை பொறுத்தவரை, கதை கேட்கும் போதே இது திரையரங்கத்திற்கான படமா இல்லையா என்பதை முடிவு செய்து விடுவேன். ராட்சசன் படத்தில் கொலைகள் இருக்கும், ஆனால் காட்சிகளாக வெட்டுவதையோ, இரத்தம் தெறிப்பதையோ காட்ட மாட்டோம். அதனால், தான் அந்த படத்தை குடும்ப ரசிகர்கள் பார்த்தார்கள், அதுபோல் தான் ஆர்யன் படத்திலும், பயமுறுத்தும் காட்சிகள் இருக்கும், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களை மிரட்டுமே தவிர, அந்த காட்சிகளில் வெட்டுவது, இரத்தம் தெறிப்பது, வன்மம் என எதுவுமே இருக்காது. எனவே, இந்த படத்தையும் நிச்சயம் குடும்பமாக பார்க்கலாம். இது முழுக்க முழுக்க திரையரங்கத்திற்கான படம், அனைத்து தரப்பினருக்குமான படம். இதில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் மற்றும் அதன் பின்னணி புதிதாக இருக்கும்.” என்றார்.
தொடர்ந்து தயாரிப்பாளராக பயணிப்பது கடினமாக இல்லையா ? என்ற கேள்விக்கு, “நான் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க, சுமார் 27 வருடங்கள் ஆகிவிட்டது, அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், நான் விரும்பியது போல் சில படங்களில் நடிக்க வேண்டும், அதற்காக தான் தொடர்ந்து தயாரிப்பாளராக பயணிக்கிறேன். இதனால் எனது நேரம் மிஞ்சமாகிறது. நேரம் விலை மதிக்க முடியாதது, நான் தயாரிப்பாளராக இருக்கும் போது அந்த நேரம் எனக்கு அதிகமாக கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து தயாரிக்கிறேன். இப்போது நான் மட்டும் தனியாக தயாரிக்க வில்லை, சிலருடன் கூட்டணி வைத்தும் தயாரிக்க தொடங்கியிருக்கிறேன்.” என்றார் விஷ்ணு விஷால்.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
‘ஆர்யன்’ வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகும்.கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை
சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், பிளாக் பட இயக்குநர் பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் யாத்திசை திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகர்-இயக்குநர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகளை கொடுத்து வாழ்த்துகளை வழங்கினார்.
துவரை பல புதிய இயக்குநர்களை LIGHTZ ÖN AWARDS உருவாக்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமை உள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர காரணமாக LIGHTZ ÖN இருக்கிறது.
புதிதாக இரண்டு பெண் குறும்பட இயக்குநர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை சேர்ந்த 'முரண்' என்கிற குறும்படமும் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIGHTZ ÖN YOUTUBE CHANNEL குறும்பட இயக்குநர்களுக்கான முதல் சேனலாக திகழ்வது பெருமைக்குரியது.
TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது
ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025ன் முக்கியப் பகுதியான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை புரொடியூசர் பஜார் நடத்தவுள்ளது.
ஆங்கிலத்தில் பி2பி (B2B) என்று அழைக்கப்படும் தொழில்துறை நிகழ்வான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட், இந்திய திரைப்பட மற்றும் ஏவிஜிசி (அனிமேஷன், வி எஃப் எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளுக்கான பிரத்யேக வர்த்தக மையமாக செயல்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் படைப்பாளிகள் மற்றும் உள்ளடக்கத்தை வாங்குவோருக்கிடையேயான பாலமாக செயல்படும்.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹைதரபாத்தில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது. புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் டிவிஏஜிஏ பொதுச்செயலாளர் மைக் மாதவ ரெட்டி இதில் கலந்து கொண்டனர். டிவிஏஜிஏ தலைமை செயல் அலுவலர் ஷேக் காஜா வாலி, புரொடியூசர் பஜார் இணை நிறுவனர் விஜய் டிங்காரி இந்த முன்னெடுப்பில் முக்கிய பங்காற்றினர்.
உள்ளடக்க உரிமைகளை எளிதில் விற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளுடன், திரைப்படங்கள், இணையத் தொடர்கள், குறும்படங்கள், பிராந்திய படைப்புகள் உள்ளிட்ட அனைத்து வித படைப்புகளின் வர்த்தகத்திற்கான ஒற்றை சாளரமாக இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் திகழும். அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஜீ5, ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள், ஒலிபரப்பு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை இதில் பங்கேற்று படைப்புகளை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டில் வளரும் படைப்பாளிகள் தங்கள் கதைகள் மற்றும் திட்டங்களை தயாரிப்பாளர்கள், ஸ்டூடியோக்கள், ஓடிடி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகளை சந்தித்த புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு அவர்களை இந்நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அவர்களும் இசைவு தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு, "தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் இணைந்து இந்தியா ஜாய் 2025ன் இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். தமிழ் திரைத்துறையின் முக்கிய அங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கிறோம். படைப்பாளிகள் மற்றும் வாங்குவோருக்கிடையேயான முக்கிய பாலமாக செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி," என்றார்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!
மாடர்ன் இந்திய ஆண்களுக்கான திருமண மற்றும் விழாக்கால ஆடை பிராண்ட் டஸ்வா (Tasva), ABFRL மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய நிறுவனம், தற்போது சென்னை நகரின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தன் பிரமாண்டமான பிரதான ஷோரூம் அமைந்துள்ளது. 2500 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த மொத்த விற்பனை மையம், நவீன ஆண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செம்மையான ஆடைகள் மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என டஸ்வா வலியுறுத்துகிறது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கோலிவுட் நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய வருகையால் இந்த திருவிழா மற்றும் திருமணத் தொகுப்பை வெளியீட்டார்.
சென்னை கடை வெறும் ஷாப்பிங் இடமல்ல — அது ஒரு அனுபவம். இந்தியாவின் மரபையும், நவீன அழகியலையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கடை, இந்திய பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளால் நிரம்பியுள்ளது, இதன் மூலம் டஸ்வாவை வரையறுக்கும் காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது.
இந்த கடையில் டஸ்வாவின் திருவிழா ஆடைத் தொகுப்பு — கண்கவர் குர்தா செட் மற்றும் குர்தா-புண்டி செட்கள், துடிப்பான ஸ்கிரீன் பிரிண்ட்கள் மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் பாரம்பரிய ஆடைக்கு புதுமையான தோற்றத்தை கொண்டு வந்துள்ளது. திருமணத் தொகுப்பில் அழகான ஷெர்வானிகள், அச்கான்கள், மற்றும் புதுமையான அங்க்ரகா ஷெர்வானிகள் ஆகியவை சிறப்பாக தையலிடப்பட்ட நுண்ணிய எம்பிராய்டரி பணிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டஸ்வா பிராண்ட் தலைவர் அஷிஷ் முகுல் கூறியதாவது:
“சென்னையில் எங்கள் புதிய திருவிழா மற்றும் திருமண ஆடைத் தொகுப்பு டஸ்வாவின் அடிப்படை மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — அது ஸ்டைல், மரபு, மற்றும் கைவினைப் பணியின் சேர்க்கையாகும். ஒவ்வொரு கலெக்ஷனும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற ஷோரூம் ஸ்டைலிஸ்ட்கள் தனிப்பட்ட ஃபேஷன் ஆலோசனைகளோடு, நவீனத்தன்மை மற்றும் மரபும் இணைவதால் ஒரு தனித்துவமான அனுபவம் டஸ்வா வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.”
தென்னிந்தியாவில் டஸ்வாவின் விரிவாக்கத்திற்கான முக்கியமான படியாக இந்த சென்னை கடை அமைகிறது. பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மற்றும் சமீபத்தில் புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே தன் அடித்தளத்தை வலுப்படுத்திய டஸ்வா, தென்னக சந்தையில் தன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
“சென்னை நகரம் அதன் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் மையமாக இருப்பதால், எங்கள் அடுத்த கடைக்கான இயல்பான தேர்வாக இருந்தது. நகரத்தின் தேர்ந்த வாடிக்கையாளர்கள் டஸ்வாவின் கைவினைத் திறனையும், தரத்தையும், ஸ்டைலையும் நிச்சயமாக மதிப்பார்கள்,” என முகுல் கூறியிருக்கிறார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு கூறியதாவது :
“திருவிழா காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னையில் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். இங்கே கொண்டாடப்படும் விழாக்கள் கலாச்சார ரீதியாக பெரும் அர்த்தம் கொண்டவை. டஸ்வாவின் கலெக்ஷன் இதற்குத் தகுந்ததாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். சென்னையில் வளர்ந்த எனக்கு, குடும்ப விழாக்களும், பண்டிகைகளும் எப்போதும் மனதில் சிறப்பு இடம் பெற்றவை. அந்த தருணங்களில் நம்மை நாமே சிறப்பாக உணர்வது முக்கியம். திருமணமாகட்டும், விழாவாகட்டும் — டஸ்வாவின் ஆடைகள் ஆண்களுக்கு வசதியுடன் ஸ்டைலாகக் கொண்டாடும் வாய்ப்பை வழங்குகின்றன. என் சொந்த ஊரில் இதை பகிர்வது எனக்கு இன்னும் தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது.”
தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!
தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது.
அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது.
படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது.., “இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.”
பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக “ராம்போ” உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, அக்டோபர் 10ஆம் தேதி முதல் “ராம்போ” படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்!
மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினில், ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத்தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.
இப்படத்தினில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி K கணேஷ் கூறியதாவது..,
மூக்குத்தி அம்மன் ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து, ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தர வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு சிறு துளி தான் இந்த ஃபர்ஸ்ட் லுக்.
தெய்வீகமும் மாயமும் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. வரும் கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா