சற்று முன்

மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!
Updated on : 09 October 2025

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ்,  JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  இணைந்துள்ளார்.



 



தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ்,  (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார்.



 



தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.



 



இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” போன்ற படங்களில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்போது #PuriSethupathi படத்திற்காக இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எமோஷன் (Emotion) ஆக்‌ஷன்  மற்றும் மாஸ் என அனைத்தும் கலந்த  புதுமையான  இசை அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.



 



நடிகை தபு  மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.



 



படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.



 



இந்த பான்-இந்தியா எண்டர்டெய்னர் #PuriSethupathi  படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா