சற்று முன்
சினிமா செய்திகள்
இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!
Updated on : 10 October 2025

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
முன்னதாக “ஆயிரத்தில் ஒருவன்” மற்றும் “மயக்கம் என்ன” என வெவ்வேறு விதமான களங்களில், இப்போது வரை கொண்டாப்படும் இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி, மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், ஜீவி பிரகாஷ் படத்தின் ஆல்பம் பற்றிய தகவலைப் பகிர்ந்து, அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்து ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது..,
“ஜீனியஸ் ஒன் அண்ட் ஒன்லி செல்வராகவன் சாருடன் ஷீட்டிங்கில் இருக்கிறேன். “மெண்டல் மனதில்” என் மனதுக்கு மிக நெருக்கமான படம். இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும்.”
இப்படத்தின் முதல் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் முதல் சிங்கிள், டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
சமீபத்திய செய்திகள்
தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து
ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி பணிக்கு செல்வதினால் இல்லத்தை கவனிக்கவும், பிள்ளைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவும், முதியவர்களை பேணவும் ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மேல் நாடுகளில் ஆட்கள் இல்லாமல் ரோபோக்களை பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை வந்து கொண்டிருக்கிறது. நம்மூரில் நல்ல பணியாளர்கள் தொண்டு செய்கிறவர்கள் நமக்கு கிடைக்கிறார்கள்.எனவே உங்கள் இல்லத்துக்கு தேவையான பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிற தொண்டாளர்கள் எல்லோரையுமே உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறது இந்த நிறுவனம். இது போன்ற நிறுவனத்தின் சேவை இல்லாமல் இந்த சமூகம் இயங்காது. இந்த நிறுவனம் தினந்தோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவைப்படுகிறது. நிறுவனம் வளர வேண்டும்.வாழ வேண்டும்.உங்கள் தொண்டு தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை காலம் அவர்களை அந்த கட்டாயத்திற்கு தள்ளுகிறது. தன்னைப் பார்த்துக் கொள்ளவும் தன் பணிகளை பார்த்துக் கொள்ளவும் தன் நிறுவனத்தை பார்த்துக் கொள்ளவும் மனிதர்கள் நேரமில்லாமல் தவிக்கிற போது தாய் தந்தையர்களும் பல இடங்களில் கைவிடப்படுகிறார்கள். சமூகம் அந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டு விட்டது. அவர்களைப் பார்த்துக் கொள்வதும் இது போன்ற நிறுவனத்தின் தேவை. மகன் செய்ய வேண்டியதையும் மகள் செய்ய வேண்டியதையும் இதுபோன்ற நிறுவனங்கள் செய்கிறது வாழ்த்துக்கள் என்று பேசினார்.
ஓய்வு பெற்ற டிஜிபி R.சேகர் IPS இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர்,நடிகர் இ.வி.கணேஷ்பாபு,
திரைப்பட இயக்குனர் சாட்டை அன்பழகன், கவிஞர் சிவராஜ், இசையமைப்பாளர் ரமேஷ்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
நிறுவனத்தின் சென்னை அலுவலக இயக்குனர் கவிஞர் இளங்கதிர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'
எலைட் டாக்கீஸ் பேனரில் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'பேட்டில்' ('Battle'). சமீபத்தில் வெளியான 'தண்டகாரண்யம்' படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்' திரைப்படத்தில் 'தங்கலான்' புகழ் அன்புடன் அர்ஜுன், 'காந்தி கண்ணாடி' படத்தில் சிறு வயது அர்ச்சனா பாத்திரத்தில் நடித்த ஆராத்யா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், சுருளி, 'இட்லி கடை' படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் 'பேட்டில்' படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி பிணைந்து முழுக்க சென்னை பின்னணியில் நடைபெறும் இக்கதை, அந்த பாடகர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திரையில் காட்டுவதோடு ஒரு முக்கிய விஷயத்தையும் வெளிச்சம் போடுகிறது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் நாராயணன், "ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை முழுக்க காட்டும் முதல் தமிழ் படம் இதுவென்று நினைக்கிறேன். ராப் பாடகர்கள் ஒன்று கூடும் இடத்தில் பேட்டில் என்ற நிகழ்வு நடைபெறும். அதை குறிக்கும் வகையிலும், நாயகன் எதிர்கொள்ளும் போராட்டங்களை விளக்கும் வகையிலும் இப்படத்திற்கு 'பேட்டில்' என்று பெயர் வைத்துள்ளோம்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சரியாக இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆராத்யா மிக முக்கிய வேடத்தில் கலக்கியுள்ளார். வலுவான வேடங்களில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா மற்றும் சரவண சுப்பையாவும், அமைச்சராக முனீஷ்காந்தும் நடிக்கின்றனர்," என்று தெரிவித்தார்.
'பேட்டில்' படத்திற்கு ஜீவா இசையமைக்க, முன்னணி ஒளிப்பதிவாளர் செழியனின் உதவியாளரான யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, பிரபல எடிட்டர் லெனின் உதவியாளரான காமேஷ் படத்தொகுப்பை கையாள்கிறார். ராவண ராம், கெபின், நிஷாந்த், கானா அப்பிலோ, சத்யபிரகாஷ் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் பாடல்களை பாடியுள்ளனர்.
எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் 'பேட்டில்' படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பா. ரஞ்சித் இன்று வெளியிட்டார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.
முன்னதாக ஒரு நீதிமன்ற பின்னணியில் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை, அழுத்தமாக வெளிப்படுத்தும்படி வெளியான, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு தற்போது வெளியீட்டு தேதியை ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது
'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.
கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என செலுலாய்டு உலகம் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் "அகண்டன்" தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.
உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான "டூலெட்". இந்த திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். அதன் பின் " வட்டார வழக்கு", "உழைப்பாளர் தினம்" என இவர் நடித்த படங்கள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவை. இவர் நடிப்பில் அடுத்த விரைவில் வெளியாகும் "ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்" இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் கலந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொட்ட வைக்கும் காதல் ரசத்தோடு "காதலிசம்" திரைப்படமும் இணையத்தில் லிவிங் டுகெதர் ? கல்யாணமா? எது வருங்கால தலைமுறைக்கு சிறந்தது என்று பேசி பலராலும் பாராட்டப்பட்டது.
தமிழில் முதல் முயற்சியாக ஐபோன் 11 மேக்ஸில் ஒரு சினிமாவை வார்த்தெடுத்திருக்கிறார் சந்தோஷ். ஆம் செல்போனில் எடுக்கும் படங்கள் ஒரு வீடு, சின்ன கிராமம் அதைத்தாண்டி அந்த பட்ஜெட்டில் யோசிக்க முடியாது. அந்த தியரியை உடைத்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் போனில் சூட் செய்து சாத்தியம் என்பதை "அகண்டன்" திரைப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.
"அகண்டன்" திரைப்படம் தமிழ்சினிமாவிற்கு புதிய வாசலை திறக்கிறது.
இனி செல்போனில் படம் பார்ப்பது மட்டுமல்லாமல் படம் எடுத்து வெளியிடவும் முடியும்.
இந்த "அகண்டன்" படம் அகண்ட திரையான திரையரங்கிற்கு வருவது தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சல்.
புதிய முயற்சிக்கு பூஞ்செண்டு தந்து வரவேற்கும் பத்திரிகை, தொலைக்காட்சி இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
படத்தை சந்தோஷ் நம்பிராஜனும், அவரது சகோதரர் பிரேம்சந்த் நம்பிராஜனும் இணைந்து நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் தயாரித்துள்ளனர். சிங்காவுட் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இணை தயாரிப்பு.
நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ஹரினி, பிரபல சிங்கப்பூர் நடிகர் யாமீன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நான்கு சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கும்.
நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'
இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்த ஒரு காவியமாக உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை–மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளரான ஏக்தா R கபூர் கூறியதாவது:
“எங்களின் மிக பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ நவம்பர் 6 அன்று வெளியாக இருப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது என் மனதுக்கு நெருக்கமான கதை – அழுத்தமான எமோஷன், டிராமா, காதல் ஆகிய அம்சங்களுடன் இந்திய சினிமாவின் மாபெரும் காவியமாக உருவாகியுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு வர வெகு ஆவலாக உள்ளோம்.”
இயக்குநர் நந்த கிஷோர் கூறியதாவது..,
“விருஷபா மூலம் எமோஷன் நிறைந்த பிரம்மாண்ட காவியத்தை உருவாக்க விரும்பினோம். இது உறவுகள், தியாகம், விதி ஆகியவை மோதிக்கொள்ளும் ஒரு உணர்ச்சி மிகுந்த கதை. இப்படம் உருவாக படக்குழு முழுவதும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் இதை பார்வையாளர்கள் காணப்போகிறார்கள் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர், போர்வீர அரசராக மோகன்லால் அவர்களை வலிமையான தோற்றத்தில் காட்டியது. “When Destiny Calls, Blood Must Answer” என்ற வாக்கியமும், “Reborn Love – A Love So Strong, It Defies Death” என்ற உணர்ச்சி பூர்வமான டேக்லைனும் ரசிகர்களை கவர்ந்தன. டீசரின் இறுதியில் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் ஒன்றிணையும் காட்சிகள் கதையின் இரு உலகங்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் மோகன்லாலுடன் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நடிகர்களும் இணைந்துள்ளனர். இசை – சாம் C.S., ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனம் – SRK, ஜனார்த்தன் மகரிஷி, கார்த்திக், ஸ்டண்ட் இயக்கம் – பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, நிகில்.
கனெக்ட் மீடியா ( Connekkt Media )மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் (Balaji Telefilms Ltd), அபிஷேக் S வியாஸ் ஸ்டுடியோஸ் (Abishek S Vyas Studios) நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்மகுமார், வருண் மாதுர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S. வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
“விருஷபா” ஒரு தந்தை–மகன் பந்தத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சி பூர்வமான ஆக்ஷன் அதிரடி திரைப்படம். கதை சொல்லல், டிராமா, எமோஷன், காட்சியமைப்பு ஆகிய அனைத்திலும் இது மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.
இப்படம் மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்படுகிறது. இப்படம் உலகம் முழுக்க வரும் நவம்பர் 6, 2025 வெளியாகிறது.
விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இணைந்துள்ளார்.
தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ், (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” போன்ற படங்களில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்போது #PuriSethupathi படத்திற்காக இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமோஷன் (Emotion) ஆக்ஷன் மற்றும் மாஸ் என அனைத்தும் கலந்த புதுமையான இசை அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.
நடிகை தபு மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.
படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த பான்-இந்தியா எண்டர்டெய்னர் #PuriSethupathi படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'ஹாய்' (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்
அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்' முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
நயன்தாராவும், கவினும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க, கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐசரி K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது.
“இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K. கணேஷ் கூறியுள்ளார்.., மேலும் “உலக இசைத்துறையில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும். தமிழ்த் திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும். மேலும் எனது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தை தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
⸻
வேல்ஸ் விஷன் – விரிவடைந்த புதிய பாதை
டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கீழ்கண்ட துறைகளில் விரிவடைந்து வருகிறது:
திரைப்பட தயாரிப்பு – முன்னணி நட்சத்திரங்களுடன், பல பிரம்மாண்ட தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளன.
வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் –
பாடல்கள், சிங்கிள்ஸ் மற்றும் இண்டிபெண்டண்ட் ரிலீஸ்களுக்கான தனித்த இசை பிரிவு.
வேல்ஸ் ஃபிலிம் சிட்டி – EVP ஸ்டூடியோசை தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், பல்லாவரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இன்டோர் ஷூட்டிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது. 130 ஏக்கர் பரப்பளவில் 20 ஸ்டூடியோஸ், 6 திரையரங்குகள், ஹோட்டல் வசதிகள் மற்றும் சென்னை நகரின் மிகப்பெரிய கண்காட்சி மையம் ஆகியவை உள்ளன.
வேல்ஸ் போஸ்ட் (Vels Post) – விரைவில் துவங்கவிருக்கும் புதிய போஸ்ட் புரொடக்சன் மையம். இதில் எடிட்டிங், DI, கலர் கிரேடிங், VFX, சவுண்ட் டிசைன், மற்றும் மாஸ்டரிங் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
⸻
வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் வெளியிடவிருக்கும் முக்கிய திரைப்படங்கள்
D54 – தனுஷ் & விக்னேஷ் ராஜா
மூக்குத்தி அம்மன் 2 – சுந்தர் சி & நயன்தாரா
D56 – தனுஷ் & மாரி செல்வராஜ்
வடசென்னை 2 – தனுஷ் & வெற்றிமாறன்
கட்டா குஸ்தி 2 – விஷ்ணு விஷால் & செல்லையா
FAFA – ஃபஹத் ஃபாசில் & பிரேம் குமார்
டயங்கரம் – விஜே சித்து
⸻
தமிழ் இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைப்பு
ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சித்து குமார், கோவிந்த் வசந்தா, ஷான் ரோல்டன் ஆகிய பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து புது தலைமுறை தமிழ் இசை திறமைகளை உருவாக்கவிருக்கிறது.
⸻
இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்கள் மற்றும் சர்வதேச வரம்பு
வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல், இண்டிபெண்டண்ட் பாடகர்கள், க்ராஸ்-ஜானர் கலைஞர்கள் மற்றும் புதிய இசை திறமைகளுடன் இணைந்து பணியாற்றும். மேலும், பிற தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ஆல்பங்கள் வாங்கி தன் பட்டியலில் சேர்த்து, உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களில் தமிழ் இசையை பரப்பவிருக்கிறது.
⸻
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்
பற்றி
டாக்டர் ஐசரி K. கணேஷ் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னணி பப்ளிக் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள், இசை, போஸ்ட் புரொடக்சன், கல்வி மற்றும் ஸ்டூடியோ உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பரந்து விரிந்துள்ளது. படைப்பாற்றல், புதுமை மற்றும் வணிக அளவில் வளர்ச்சி மூலம் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லவுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!
MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.
நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.
பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.
பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா