சற்று முன்

பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |   

சினிமா செய்திகள்

ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!
Updated on : 04 March 2026

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெப் வெளியீடாக ‘ரிசார்ட்’ (Resort) எனும் புதிய சீரிஸை அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரிஸ், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 4 புதிய எபிசோட்களுடன் வெளியாகவுள்ளது.



 



பிரபல ‘எருமை சாணி’ மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான விஜய் குமார் ராஜேந்திரன் இந்த தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரை உலகில் முன்னணி இயக்குநராக அறியப்படும் பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக கைகோர்த்திருப்பது இந்த சீரிஸின் சிறப்பாகும்.



 



‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனைச் சொகுசு விடுதியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. முறையான கல்வி பெறாதபோதும் சமையல் கலை மீது அபார ஈர்ப்பும் திறமையும் கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்ற கனவை தன்னுள் வளர்த்துக் கொள்கிறார். அவரது லட்சியப் பயணத்திற்கும், பணியிடத்தில் நிலவும் அதிகார ஒடுக்குமுறைக்கும் இடையே உருவாகும் மோதல்களே கதையின் மையமாக அமைந்துள்ளது.



 



கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய எதிர்மறை கதாபாத்திரமாகவும் தலைவாசல் விஜய் நடித்துள்ளார். சமையலறையின் பதற்றமான சூழலை தனது மிரட்டலான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.



 



காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் சொகுசு விடுதியின் பின்னணியில் நிகழும் கலாட்டாக்கள் என பல்வேறு அம்சங்கள் கலந்த முழுமையான பொழுதுபோக்குத் தொடராக ‘ரிசார்ட்’ உருவாகியுள்ளது.



 



‘ரிசார்ட்’ வெப் சீரிஸ், மார்ச் 13 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா