சற்று முன்

காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!
Updated on : 07 March 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Amazon Prime Video தனது தமிழ் ஒரிஜினல் காமெடி–டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.



 



ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Anekdotes உருவாக்கியுள்ள இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார். Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.



 



இந்த சீரிஸில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார். மேலும் அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி இணைந்து இந்த சீரிஸை உருவாக்கியுள்ளனர்.



 



‘லோக்கல் டைம்ஸ்’ கதை, ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் – வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து – ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ‘நம்ம செய்தி’ என்ற உள்ளூர் பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் முயற்சி செய்கிறார்கள். அவர்களின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்த முயலும் ஒரு வலுவான எதிரி ஆகியவற்றைச் சுற்றியே இந்த தொடரின் கதை நகர்கிறது.



 



பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,



 “லோக்கல் டைம்ஸ் என்பது  உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.



 



தயாரிப்பாளர் ஜித்தின் துரை  கூறுகையில்..,



 “லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.



 



  படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,



 “ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம். 



 



இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,



 “லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள்.  அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை  ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ்  இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”



 



நட்பு, கனவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸ் மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா