சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!
Updated on : 11 March 2026

‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்க திரைப்படங்களைத் New!Click to editதொடர்ந்து, Insomniac’s Dream Creations நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பான (Production No.3) புதிய படத்தை பிரம்மாண்டமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.



 



முன்னதாக ‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் மூலம் சுவாரஸ்யமான மர்டர் மிஸ்டரி கதையை திரையில் கொண்டுவந்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் இது வழக்கமான திரில்லர் கதை அல்ல. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில் அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தை தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது.



 



இந்தப் படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா மற்றும் ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.



 



முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தக் கதையின் நிகழ்வுகள் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சுற்றியே நடைபெறுகின்றன. இதனால், அந்தப் பகுதிகளின் இயல்பான சூழலை உணர்த்தும் வகையில் படப்பிடிப்பையும் அங்கிருந்தே நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.



 



இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இசையை ஜோன்ஸ் ரூபர்ட் அமைக்கிறார். படத்தில் இணையும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா