சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

“முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்
Updated on : 14 March 2026

சென்னை, மார்ச் 13, 2026: JioHotstar தளத்தில் மார்ச் 27 முதல் வெளியாக உள்ள “முத்து என்கிற காட்டான்” வெப் சீரிஸின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி -யின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாக வைத்து வெளியான டீசர் இணையத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது. தற்போது வெளியான டிரெய்லர் அந்த மர்மத்தை இன்னும் அதிகரித்துள்ளது.



 



முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றிய மர்மத்தை டீசர் அறிமுகப்படுத்திய நிலையில், டிரெய்லர் கதையை மேலும் விரிவாக காட்டுகிறது. இதில் பல கதாபாத்திரங்கள் முத்துவைப் பற்றி வெவ்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். முத்து ஒரு பயங்கர குற்றவாளியா? அல்லது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதரா? என்ற கேள்விகளை எழுப்பும் விதமாக டிரெய்லர் அமைந்துள்ளது.



 



கதையின் முன்னேற்றத்துடன் முத்துவின் உண்மையான வாழ்க்கையும், அவர் செய்த சில கடுமையான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படுகின்றன.



 



இந்த தொடரில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் Milind Soman, Sudev Nair மற்றும் Muthukumar உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன்

மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.



 



தேசிய விருது பெற்ற இயக்குநர் எம். மணிகண்டன் இந்தத் தொடரை உருவாக்கியுள்ளார். அவர் பி. அஜித் குமார் உடன் இணைந்து இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தரம் செய்துள்ளனர். இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார்.



 



“முத்து என்கிற காட்டான்” தொடர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் JioHotstar தளத்தில் மார்ச் 27 முதல் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா