சற்று முன்

விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’
Updated on : 16 March 2026

நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபலமான தாம் தூம்  திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இளைஞர்களிடம் ஒரு காலத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.



 



முருகன் பிலிம் பேக்டரி சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி இந்த ரீ-ரிலீஸை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியில் பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் இவர்களுக்கு உள்ளது. மேலும் ஹோசூரில் கிராண்ட் சினிமாஸ் என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கையும் நடத்தி வருகிறார்கள். தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் வெளியிட்டு ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் தர இருக்கிறார்கள்.



 



"தாம் தூம்" படம் முதலில் 2008 ஆகஸ்ட் 28 அன்று வெளியானது. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் அழகான காதல் காட்சிகள் அந்த காலத்து இளைஞர்களை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக 2K தலைமுறைக்கும் இன்றும் நினைவில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.



 



இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது அவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் அரசியலிலும் முக்கிய பங்கிலும் உள்ளார். மேலும் இந்த படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அவர் அமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை அப்போது பெரிய ஹிட் ஆனது. அந்த பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன.



 



மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் Jeeva இயக்கத்தில் உருவான இந்த படம் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்தது. Mediaone Global Entertainment Limited மற்றும் Ayngaran International / Metro Film (P) Ltd ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்திருந்தன.



 



18 ஆண்டுகளுக்குப் பிறகு, "தாம் தூம்" படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது.



 



மேலும் முருகன் பிலிம் பேக்டரி  சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றி திரைப்படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.



 



ரவி மோகன் ரசிகர்களுக்கும், 2000களின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் "தாம் தூம்" ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக இருக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா