சற்று முன்

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |   

சினிமா செய்திகள்

“விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்
Updated on : 08 April 2026

தமிழ் திரையுலகின் இளம் முன்னணி நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்துள்ள “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (LIK) திரைப்படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் முன் வெளியீட்டு விழா, ஒரு தனியார் கல்லூரி அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினரும், பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



 



நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,



நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது. அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene-ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன். அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி. ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது. முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும். எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது. அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம். சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார்.  கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.



 



நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,



பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது. விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது. ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான்.  நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி. 



 



இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,



இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது. நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் —  நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார். அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை. பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று, எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா