சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on : 08 May 2026

தமிழ் திரையுலகில் குடும்பங்களோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



 



“தலைவன் தலைவி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதிய களத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். குடும்ப உணர்வுகளையும், நகைச்சுவையையும் தனக்கே உரிய பாணியில் கையாளும் அவர், இந்த முறை திரில்லர் மற்றும் காமெடியை இணைத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.



 



இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அந்த குடும்ப உறுப்பினர்களின் தனித்துவமான குணாதிசயங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் அபூர்வமான சம்பவங்களும் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. சென்னை முதல் கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த திரைக்கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



 



படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றங்களும், அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வடிவமைப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.



 



படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி மற்றும் அனந்திகா சனில்குமார் இணைந்துள்ளனர்.



 



மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு, “தலைவன் தலைவி” பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜுடன் இணைந்து இப்படத்தில் முழுநீள முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் தோன்றுகிறார். அதேபோல் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.



 



“பரிமளா & கோ” திரைப்படத்தை Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகிறார்.



 



திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா