சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

நயன்தாராவின் புதிய காதல்
Updated on : 12 May 2015

நீண்டு வரும் நயன்தாராவின் காதலர் பட்டியலில் இப்போது இடம் பிடித்திருப்பவர் சிம்புவின் நண்பரும் போடா போடி பட இயக்குனருமான விக்னேஷ் சிவன்தான். 



தமிழில் அறிமுகம் ஆகும் முன்பே மலையாளப்பட இயக்குநர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்  நயன்தாரா அவரை கழட்டிவிட்டுவிட்டு தமிழில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார். அப்பொழுது சிம்புவுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் உல்லாசமாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். இவர்களின் ரோமன்ஸ் பற்றிய செய்திகள் அடிக்கடி இணையதளங்களில் வலம் வந்தன.  பிறகு இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்தனர்.



சிம்புவுடன் காதல் முறிந்த கையோடு  மூன்றாவதாக நடிகர் பிரபுதேவாவை  காதலித்தார். இவரின் காதல் வலையில் விழுந்த பிரபுதேவா தன் காதல் மனைவியான ரமலத்தை விவாகரத்து செய்தார். பிரபு தேவாவும் நயன்தாராவும் தம்பதியை போல் சுற்றி திரிந்தனர். டயானா குரியன் என்ற பெயர் கொண்ட கிறிஸ்தவ பெண்ணான நயனதாரா தன் காதலர் பிரபுதேவாவுக்காக இந்து மதம் மாறினார். தன்னுடைய கையில் பிரபு என பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு பிரபு தேவா மீது வெறித்தனமான காதல் கொண்ட நயன்தாரா. திடிரென ஒருநாள் பிரபுதேவாவுடனான காதலை முறித்துக்கொண்டார். 



பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா  படங்களில் நடித்தபோது உதயநிதி ஸ்டாலினுடன் காதல் ஏற்பட்டதாகவும் இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் பெரிய பிரச்சினை எனவும் ஆகவே உதயநிதி ஸ்டாலின் பக்கமே வரக்கூடாது என எச்சரிக்க பட்டதாகவும் கூறப்பட்டது.



இப்படியாக போய்கொண்டிருந்த நயன்தாராவின்  காதலர் பட்டியலில் தற்போது இடம் பிடித்திருப்பவர் தான் விக்னேஷ் சிவன். இவர் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகிவருகிறார்கள், தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இருவரும் மாலதீவுக்கு ரகசியமாக உல்லாச பயணம் சென்று வந்துள்ளனர். ஏறக்குறைய இருவரும் தேனிலவு போல் சென்று வந்துள்ளனர். மலையாளியான விக்னேஷ் சிவன் தன்னை ஏமாற்ற மாட்டார் என்று நயன்தாரா பெரிதும் நம்புகிறார். நம்பிக்கைக்காக விக்னேஷ் சிவனை தன்னுடைய பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நயன்தாரா. 



இவ்வாறு நீண்டு வரும் நயன்தாரா காதல் எண்ணிக்கை இதோடு முற்று பெறுமா அல்லது இன்னும் நீளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தான் பதில் சொல்லவேண்டும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா