சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

கலைப்புலி S தாணுவை எதிர்க்கும் ஜே கே ரித்தேஷ்
Updated on : 19 August 2016

கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜே கே ரித்தேஷ். இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளரும் ஆவார். 



 



இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பங்கேற்றவர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் போன்றவை வழங்கி உதவி செய்தவர்.



 



இவர் 2009ல் 15வது லோக் சபாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்றத்தில் உறுப்பினராக வெற்றிபெற்றவர். கடந்த 2014ம் ஆண்டு ஆதிமுகாவில் இணைந்தார்.



 



இவை ஒருபுறம் இருக்க இவர் வரும் தயாரிப்பாளர் சங்க தலைவராக போட்டியிட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. 



 



கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று இளைய சமுதாயத்தினர் மிக சிறந்த முறையில் ஆளுகை நடத்தி வருவது போல் இந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலிலும் மாற்றம் நிகழ்ந்தால் மேலும் திரையுலகில் வளர்ச்சியை காணலாம் என இளைய தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர்.



 



மேலும் தலைவர் பதவிக்கு ஜே கே ரித்தேஷ் போட்டியிடுவது போல் மற்ற பொறுப்புகளுக்கு பலர் போட்டியிடுகின்றனர். அது பற்றி தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா