சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் சேரனின் மகளுக்கு தருமபுரி நீதிமன்றம் பிடியாணை
Updated on : 20 August 2016

இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை தருமபுரி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



 



திரைப்படத்தை டிவிடி மூலம் மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் "சிடூஎச்' திட்டத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார். ஆனால் இந்த முறையானது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.



 



இந்நிலையில், தருமபுரி மாவட்ட சிடூஎச் விநியோகஸ்தராக இருந்த பிரசன்னா வாசுதேவன், தான் செலுத்திய வைப்பு நிதியை திரும்ப கேட்க, அவருக்கு 4.53 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.



 



காசோலைக்கான பணம் வங்கியில் இல்லாததால், தருமபுரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் பிரசன்னா வாசுதேவன்  வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக இரண்டுமுறை அழைக்கப்பட்ட சிடூஎச் நிறுவனத்தின் நிர்வாகியான சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.



 



இதனால் தற்போது நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா