சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

இயல் – இசை - நாடகத் - திருவிழா
Updated on : 15 May 2015

வரும் ஜுலை மாத இறுதியில் சென்னையில், தமிழக அளவிலான நாடகப்போட்டி,
இசைப்போட்டி, நடனப் போட்டிகளை டாப்சி (தமிழ்நாடு திரைப்பட 
படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டமைப்பு) நடுத்துகிறது. இதில் 
தமிழகம் முழுக்க இருக்கும் சிறந்த நாடக குழுக்கள், ஓரங்க நாடகம், அமைச்சூர் 
நாடகம், சரித்திர சமூக நாடகங்கள். நாடகங்களின் கதாசிரியர்கள் முன்பதிவு செய்து 
கொள்ள வரவேற்கப் படுகிறார்கள்.
அது போன்றே! சிறந்த பாடல் இசைக் குழுக்களும் வரவேற்கப்படுகிறது. அது 
போன்றே தமிழகம் முழுக்க இருக்கும் நடன, நாட்டியத்தில் சிறந்து விளங்கும் 
அமைப்புகள், டாப்சியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன் 
பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தம் 6 நாட்கள் நடைபெறும் இயல், இசை நாடகத் திருவிழாவில், காலை 9.00 
மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.00 மணி வரை நடைபெறும். இதில் பிரபல முன்னணி 
தயாரிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், முன்னணி 
இயக்குநர்கள், நீதிபதிகளாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கு 
பெறுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாடகங்களுக்கு முதல் பரிசு ரூ.75,000/- ரொக்கமும், 
இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், மூன்றாம் பரிசு ரூ.25,000/- ரொக்கமும் 
வழங்கப்படும். அது போன்றே! தேர்ந்தெடுக்கப்படும் பாட்டிசைக் குழுவினர்க்கு 
முதல் பரிசு 75,000/- ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், 
மூன்றாம் பரிசு ரூ.25,000/- ரொக்கமும் வழங்கப்படும்.
அதுபோன்றே! தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நடன நாட்டிய குழுவினர்க்கு முதல் 
பரிசு ரூ.75,000/- ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், மூன்றாம் 
பரிசு ரூ.25,000/- ரொக்கமும் வழங்கப்படும்.
மேலும் டாப்சியின் வெற்றி கேடயங்களும், கலந்து கொள்ளும் அனைத்து 
போட்டியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகளும், மேடையில் வழங்கப்படும். வளர்ந்து 
வரும் திரைப்படத் துறையில் சிறந்த கதைகளின் தேடலுக்காகவும், தமிழ்நாட்டின் 
சமூக, சமுதாய மேம்பாட்டிற்காகவும், கலைத் துறையில் நூற்றுக்கணக்கான 
புதியவர்கள், அறிமுகமாகி சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கில் 
ஒவ்வொரு வருடமும் டாப்சி, இயல் இசை நாடகத் திருவிழாவை கோலாகலமாக நடத்தும்.



அணுக வேண்டிய முகவரி


கைப்பேசி : 9445720888, 9444241039

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா