சற்று முன்

இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ள 'என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச' – மையல் பட மெலோடி!   |    ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ள ’குட் பேட் அக்லி’   |    தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி   |    அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணியில் சாதனைப்படைக்கும் #AA22xA6 !   |    மாஸ்டர் சித்தார்த் பன்னீரின் 'மிஸ் மேல கிரஷ்' பான் இந்திய வீடியோ ஆல்பம்!   |    உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் 'கேங்கர்ஸ்'ல் இருக்கிறது - நடிகர் வடிவேலு   |    மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள “45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா!   |    ZEE5 ல் சாதனை படைத்த 'கிங்ஸ்டன்' திரைப்படம்!   |    தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியானது!   |    அமெரிக்காவில் ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை சந்தித்த உலகநாயகன்!   |    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்தில் இணைந்துள்ள நடிகை தபு!   |    பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY படப்பிடிப்பு இனிதே துவங்கியது!   |    இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா!   |    'ரெட்ட தல' படத்திற்க்காக மீண்டும் இணைந்த தனுஷ், அருண் விஜய் கூட்டணி!   |    தங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்'   |    குளோபல் ஸ்டார் ராம் சரணின் பான்-இந்தியா படமான 'பெத்தி' படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    ஆக்சன் கிங் அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்   |    8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து 'வீர தீர சூரன்' ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது!   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் 'மெட்ராஸ் மேட்னி' டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

தூக்குதண்டனை கைதி பாலுச்சாமியின் நிஜக்கதை படமானது
Updated on : 18 May 2015

 ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. யுடிவி தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில்  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்.



தூக்கு தண்டனை கைதியாக ஆர்யாவும், தூக்கில் போடும் தொழிலாளியாக விஜய் சேதுபதியும், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் சிறை அதிகாரியாக ஷாமும் மிகவும் பிரமாதமாக நடித்துள்ளனர். 
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இப்படத்தைப் பார்த்தார்.
ஆர்யாவை படத்தில் பார்க்கும் போதெல்லாம் தன் மகனை பார்ப்பதை போல் எண்ணி கண் கலங்கினார். படத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள், ஆர்யாவை தூக்கிலிடுவது போன்ற காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் தன் மகன் பேரறிவாளனையும், தூக்கு தண்டனையின் கொடூரத்தையும் நினைத்து மனம் வருந்தினார். மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து மாபெரும் மக்கள் இயக்கத்தை தீரத்துடன் முன்னெடுத்து வருபவர் அற்புதம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.



கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுக்கு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் வெளியான முதல் நாளே, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட பல தலைவர்கள் இப்படத்தைப் பார்த்தனர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், “படத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி பாலுச்சாமி என்ற பாலுவாக ஆர்யா வரும் காட்சிகளைப் பார்த்து ஐயா நல்லகண்ணு கண் கலங்கிவிட்டார். காரணம், நிஜவாழ்க்கையில் பாலுச்சாமி என்ற மதுரை பாலு என்ற ‘தூக்குமேடை தியாகி’ பாலு சிறையில் அடைக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டபோது, அதே சிறையில் சக கைதியாக இருந்து அந்த கொடிய நிகழ்வின் துயரங்களை அனுபவித்தவர் ஐயா நல்லகண்ணு” என்றார்.



நிஜவாழ்வில் புரட்சியாளராகத் திகழ்ந்து, தூக்கிலிடப்பட்ட பால்ச்சாமி என்ற மதுரை பாலு என்ற ‘தூக்குமேடை தியாகி’ பாலுவுடனான் தன் அனுபவம் குறித்து நல்லகண்ணு எழுதியிருப்பதாவது:-



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1948ல் தடை செய்யப்பட்டது. கம்யூனிஸ்டு தலைவர்கள் தலைமறைவானார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுப்பவர்களுக்கும், பிடித்துக் கொடுப்பவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் “சன்மானம்” கொடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட்டார்கள்.



நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் நரவேட்டையாடப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவுடன் கொடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அடி, உதை, காலில் லாடம் கட்டுவது, செங்கல்லை கையிடுவலில் வைத்துக் கட்டி தண்ணீர் விடுவார்கள். செங்கல் விரியும்போது உடல் புண்ணாகும். நிர்வாணமாக்கி தண்ணிரில் நாள் முழுவதும் நிற்க வைப்பார்கள். தூக்கமின்றி புலம்ப வேண்டியதிருக்கும். இத்தகைய மிருகத்தனமான கொடுமைகளை அகிம்சை ஆட்சியாளர்களின் ஆசியோடு அதிகாரிகள் நடத்தினார்கள்.



பல மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் மீது சதி வழக்குகள் போடப்பட்டு, மாதக்கணக்கில் தனி நீதிமன்றங்களில் விசாரணைகள் நடந்தன.



மதுரை சிறையில் மதுரை, இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தோழர்கள் அடைக்கப்பட்டிருந்தோம்.



மதுரையில் துப்பறியும் காவல்துறை தலைமைக் காவலர் செண்பகம் சேர்வை கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை பாலு உள்ளிட்ட 6 தோழர்கள் சேர்க்கப்பட்டார்கள். தோழர் பாலுவுக்கு தூக்கு தண்டனையும், மற்ற 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.



தூக்குத் தண்டனை 1951 பிப்ரவரி 22ஆம் நாளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாளும் குறிக்கப்பட்டது.
சிறை அதிகாரிகள் பரபரப்புடன் எங்களுக்குத் தெரிவித்து விட்டார்கள். இரண்டு நாட்களும் மதுரை சிறை முழுதும் பேச்சரவம் இல்லாத துக்கவீடு போல் காட்சியளித்தது


.
பிப்ரவரி 21ஆம் நாள் இரவு 8 மணி வரை நாங்கள் அனைவரும் வரிசையாக நின்று, தனிக் கொட்டறையில் சிங்கம் போல் காட்சியளித்த தோழர் பாலுவுக்கு புரட்சி வணக்கம் செலுத்தினோம்.



9ஆம் பிளாக்கில் அடைக்கப்பட்டோம். அடுத்து பெரிய மதில் சுவர். அச்சுவருக்கு மறுபக்கத்தில் தான் தூக்கிலிடப்படும் மரணக்குழி உள்ளது.



பிப்ரவரி 22 காலை 4 மணிக்கு மரண பயம் ஏதுமின்றி, சொல் தடுமாற்றம் ஏதும் இல்லாமல், தெளிந்த உறுதியான குரலில், “புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!” என்ற சப்தம் கேட்டதும், மறைக்கப்பட்ட பெரிய மதில் சுவரில் எதிரொலி கேட்கும் நேரத்தில், நாங்களும் “தியாகி பாலு நாமம் வாழ்க! புரட்சி ஓங்குக!” என்று முழங்கினோம். இது மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும்.



வழக்கமாக தூக்குத் தண்டனை கைதிகளை, தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் மாலையில், நாங்கள் சந்திப்பது வழக்கம். அழுது துடிப்பார்கள். ஆனால் தோழர் பாலு அவர்கள், தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டபோதும், படித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தார். பார்க்க வருபவர்களுக்கு ஆறுதல் கூறினாரே தவிர அவரிடம் மரண பயம் இல்லை. மாபெரும் வீரனாகத் தோன்றினார்.



குற்றம் இழைக்காதவர்கள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகவே சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். வழக்கறிஞர்களின் விவாதமும் நடைபெறும். அதுவே நீதித் துறையின் பெருமைக்குரிய நியதி ஆகும் என்று காலம்முழுதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், தோழர் பாலு சம்பந்தப்பட்ட வரையில், நீதித் தராசு ஓரம் சாய்ந்து விட்டது. மன்றோரறம் சொன்ன பாழ்மனை ஆகிவிட்டது.



தோழர் பாலு எந்த சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. பஞ்சாலைத் தொழிலாளியாக பணியில் இருந்தபோது, வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டார். வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் காவல் துறையில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. தெலுங்கானா விவசாயிகளை அடக்குவதற்கு அனுப்பப்பட்டார். விவசாயிகளை சுட மறுத்தார். அதிகாரிகளின் வெறிச்செயல்களுக்கு துணைபோக மறுத்தார். கம்யூனிஸ்டாக இருந்தார் என்பதற்காகவே வழக்கில் இணைக்கப்பட்டார். நிரபராதியான பாலு துக்கிலிட்டு கொல்லப்பட்டார் என்பதே அநீதியாகும்.



இவ்வாறு நல்லக்கண்ணு எழுதியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா