சற்று முன்

'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |    பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!   |    'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!   |    திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |   

சினிமா செய்திகள்

கலைப்புலி எஸ். தாணுவின் 35 வருட தவம் பலித்தது
Updated on : 01 June 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் பா.இரஞ்சித் இயக்குகிறார்.


40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு.

ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து பைரவி படத்தை விளம்பரம் செய்தார்.


விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984 ஆம் ஆண்டு தயாரிப்பாளராகி... யார் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.

கலைப்புலி எஸ். தாணு  தயாரித்து முதன்முறையாக இயக்கிய புதுப்பாடகன் படம் உட்பட அவர் தயாரித்த பல படங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததே சூப்பர்ஸ்டார் ரஜினிதான்.

ரஜினி நடித்த அண்ணாமலை, முத்து, பாட்ஷா ஆகிய படங்கள் உருவாகும் நேரத்தில்  கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் சூழல் இருந்தது, சில பல காரணங்களால் காலதாமதம் ஆனது.

ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி எஸ். தாணு தவம் இருந்தார்.

அவரது தவத்துக்குக் கிடைத்த வரமாக தற்போது, கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் பா.இரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.

கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். 

மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்கள் - கபிலன், உமாதேவி, கானா பாலா

கலை இயக்கம் - ராமலிங்கம்

படத்தொகுப்பு - பிரவீன் கே.எல்.

சண்டைப்பயிற்சி - அன்பு - அறிவு

நடனம் - சதீஷ்

ஒலி வடிவமைப்பு - ரூபன்

ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. 

 


அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா