சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

'காஷ்மோரா' பாடல்கள் வெளியானது - (ட்ரைலர் இணைப்பு)
Updated on : 07 October 2016

கார்த்தி நாயகனாக நடித்துள்ள "காஷ்மோரா" படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது.



 



கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள "காஷ்மோரா" திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 



கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளன.



 



பாகுபலி, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் பிரம்மாண்டத்தை நினைவுபடுத்தும் வகையில் படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது.



 



படம் குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, "இப்படத்தில் வரும் காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது. இந்த கதாபாத்திரத்தை உருவாக்க இயக்குநர் கோகுல் அதிக காலம் எடுத்து கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்து இப்பாத்திரத்தை படைத்துள்ளார்.



 



ஏனென்றால் இப்பாத்திரம் மிகவும் புதுமையானது , தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கையிலெடுக்காத ஒரு கதாபாத்திரம். ஆம், காஷ்மோரா என்பவன் இது வரை தமிழ் சினிமாவில் யாரும் ஆழமாக சொல்லாத, தொடாத பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை செய்யும் பிளாக் மேஜிசியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பாத்திரம் ராஜ் நாயக் பாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபாடும். நிச்சயம் இதை ரசிகர்கள் மிகபெரிய அளவில் ரசிப்பார்கள்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா