சற்று முன்

IMDB கொடுத்த ரேட்டிங்.... 'மாமனிதன்' படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!   |    'மாயோன்' திரைப்படத்தை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் 'கட்டப்பா' சத்யராஜ்   |    பான் இந்திய நடிகையாக மாறிய கோமல் சர்மா   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'விக்ரம்'   |    'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் - காயத்ரி   |    கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.   |    சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா   |    திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் பதவி ஏற்பு!.   |    'சுழல்' வெற்றிக்காக கதிரை வாழ்த்திய 'இயல்வது கரவேல்' படக்குழு   |    நாக சைதன்யாவின் 'NC 22 ' பட நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்புடன் இனிதே ஆரம்பமானது   |    நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் 'மிடில் கிளாஸ்'   |    ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!!!   |    ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்   |    ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !   |    'வீட்ல விசேஷம்' திரைப்பட வெற்றி விழா !   |    'மாயோன்' பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌ !   |    நடிகையின் ஆசைக்கு கரம் நீட்டிய ஜெய் !   |    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |    மாற்றுத்திறனாளியான திருமூர்த்திக்கு கமல்ஹாசன் செய்த உதவி !   |    “வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |   

croppedImg_1583208734.jpeg

'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்

Directed by : Arunraja Kamaraj

Casting : Udhayanidhi Stalin, Aari Arujunan, Tanya Ravichandran, Shivani Rajasekhar, Sivaangi Krishnakumar, Suresh Chakravrthy, Yamini Chander, Ramesh Thilak

Music :Dhibu Ninan Thomas

Produced by : Boney Kapoor

PRO : DOne

Review :

ஐபிஎஸ் அதிகாரி விஜய்ராகவனுக்கு(உதயநிதி ஸ்டாலின்) தமிழகத்தில்  பொள்ளாச்சிக்கு அருகே உள்ள சுதந்திரபாளையம் என்ற கிராமத்தில் போஸ்டிங் போடப்படுகிறது

 

அந்த கிராமத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் புரையோடிக் கிடக்கிறது. எந்த அளவுக்கு என்றால், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண், அரசுப் பள்ளியில் சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார். இதனிடையே, ஆதி திராவிடர்கள் அடர்த்தியாக வாழும் அந்தக் கிராமத்தில், இரண்டு மாணவிகள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள்.

 

இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் உதயநிதிக்கு பல தடங்கல்கள் வருகிறது. அந்த மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி என்ன?, அதை செய்தவர்கள் யார்? அவர்களை உதயநிதி கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்தாரா? போன்ற கேள்விகளுக்கு  பதில்கள் தான் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் கதை.

 

படத்தில் நாயகனாக விஜயராகவன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் தன் கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார். அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போன்று அமைந்துவிட்டது.  இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து இருக்கிறது. தேவையான இடங்களில் மட்டும் கோபத்தை வெளிக்காட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், உதயநிதிக்கு ஊக்குவிக்கும் கதாபாத்திரம். இதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

போராளியாக நடித்திருக்கும் ஆரி, உதயநிதியின் மனைவியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, ராட்சசன் சரவணன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையோடு பயணிப்பதால் அவர்களுடைய வசனங்களும், நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

முதல்பாதியில் கதை சென்ற விதம் லேசாக தொய்வடைந்தது தான் சரிவு. ஆதியின் கதாபாத்திரம் அருமை. அவரின் கதாபாத்திரத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். 

 

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது. ரூபன் எடிட்டிங் கச்சிதம். 

 

“எல்லாருமே சமம் என்றால் யார் தான் ராஜா?” என்ற கேள்விக்கு இயக்குநர் கொடுத்திருக்கும் பதில், ”இந்த வேலையை இவங்க தான் செய்யனும், இவங்க இங்க தான் இருக்கனும்”, என்று சொல்லி இப்பவும் மக்களை மட்டம் தட்டும், தங்களை மேல்தட்டு மக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு சரியான சாட்டையடி.

 

அரசியலில் நுழைந்திருக்கும் உதயநிதி, இந்திக்கு எதிராக பேசும் வசனம் என்று சொல்வதை விட தாய்மொழிக்கு ஆதரவாக பேசும் வசனத்திற்கு ஒட்டுமொத்த தியேட்டரே எழுந்து நின்று கைதட்டுகிறது. அப்படி அவரை எப்படி காட்டினால் ரசிகர்கள்  ஏற்றுக்கொள்வார்கள், அவரை எப்படி பேச வைத்தால் கதைட்டல் கிடைக்கும் என்று மிக கவனமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுத்தாலும் பத்தாது.

 

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது அவரது இசை. அங்காங்கே வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றது. 

 

"நெஞ்சுக்கு நீதி​" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA