சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_240457751.jpeg

'வீட்ல விசேஷம்' விமர்சனம்

Directed by : RJ Balaji and NJ Saravanan

Casting : RJ Balaji, Sathyaraj, Urvashi, Aparna Balamurali, Yogi Babu, Pugazh

Music :Girishh Gopalakrishnan

Produced by : Boney Kapoor and Raahul

PRO : DOne

Review :

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் '"ய் ஹோ". இப்படத்தை தற்போது வீட்ல விசேஷம் என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர்.

 

காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? - இதுதான் 'வீட்ல விசேஷம்' கதை.

 

50 வயதில் கர்ப்பம் அடைவது, வேற நோக்கத்தில் பார்க்கபட்டாலும், அதில் இருக்கும் காதல், பாசம், உணர்வு என அனைத்தும் கலந்து சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன்.

 

சத்யராஜ் அவருக்கு ஏற்றாற்போல் கதாபாத்திரம் அமைந்துவிட்டதால் ஆக்டிங்கில் பின்னி பெடல் எடுத்து உள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்கிறார் சத்யராஜ். 

 

ஊர்வசி அம்மாவாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து நடிப்பில் மிரட்டுகிறார். தாய்மையை புனிதப்படுத்தும் காட்சிகளில், 'ஆம்பள தடியா' என மிரட்டிப் பேசுவது, சங்கடமான சூழல்களை எதிர்கொள்வது, கர்ப்பத்தால் உண்டான ஒருவித சோர்வை முகத்தில் சுமந்திரிப்பது என நடிப்பில் உச்சம் தொடுகிறார். க்ளைமாக்ஸ் காட்சி முழுவதுமே ஊர்வசிதான் ஆக்கிரமித்திருக்கிறார்.

 

இயக்குநராகவும் நடிகராகவும் ஆர்ஜே பாலாஜி கலக்கி இருக்கிறார். பாலாஜி தனது காமெடியை ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் படம் முழுக்க கொடுத்திருக்கிறார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டும் அபர்ணா பாலமுரளியின் கியூட்டான நடிப்பை கொடுத்துள்ளார். 

 

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் எடிட்டிங்கும் கவனிக்கவைக்கிறது.

 

படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதி எமோஷனலுடனும் நகர்த்தியிருக்கிறார்கள். பெரும்பாலான காமெடிக் காட்சிகள் பொதுப் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கின்றன.

 

Verdict : மொத்தத்தில் ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA