சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_601341765.jpeg

"விக்டிம்" ஆந்தாலஜி பட விமர்சனம்

Directed by : Venkat Prabhu, Chimbudevan, Rajesh.M, Pa.Ranjith

Casting : Nazar, Prasanna, Guru Somasundaram, Amala Paul, Priya Bhavani Shankar, Natty, Kalaiyarasan, Hari Krishnan, Baby Tharani, Thambi Ramaiah

Music :Sam CS, Prem Ji, Ganesh Sekar, Tenma

Produced by : Axes Film Factory and Black Ticket Company

PRO : DOne

Review :

 

 

பா.இரஞ்சித், சிம்புதேவன், எம்.ராஜேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய நான்கு இயக்குனர்கள் நன்கு வெவேறு கதைகளை ஒரே கருவை மையமாக வைத்து கொண்டு உருவாகியுள்ள ஒரு ஆந்தாலஜி வகை திரைப்படம் ‘விக்டிம்’.  

 

"தம்மம்"

 

ஆதிக்க வர்க்கமான நிலச்சுவாந்தரால் அடிமட்ட வழக்கை வாழும்  விவசாயி ஒருவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதை  மிக அழுத்தமான வசனங்களோடு மறைமுகமாக அரசியல் கலந்து கூறுவதே இந்த படத்தின் கதை. 

 

குரு சோமசுந்தரம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், பேபி தாரணி ஆகியோரது நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. குறிப்பாக வயல்வெளியில் நடக்கும் சண்டைக்காட்சி ஒரிஜினல் சண்டைப்போல் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள். தமிழ் அழகனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சிறுமி மீன் பிடிக்கும் காட்சி ஆச்சரியம் தருகிறது. வயல்வெளியை ஏரியல் ஷாட்டில் காட்டியது, சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் என படத்தை தொழில்நுட்ப ரீதியாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். தென்மாவின் இசை படத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

 

"கொட்டைபாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்"

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிருபர் ஒருவர் தனது வேலையை காப்பாற்றிக்கொள்ள மொட்டை மாடி சித்தரை சிறப்பு பேட்டி எடுக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா, என்பது தான் இதன் கதை. சிம்புதேவன் தனது வழக்கமான ஃபாண்டசி முறையில் அரசியல் நையாண்டி செய்திருக்கிறார். தம்பி ராமையா, நாசர், விஜே விக்கி ஆகியோர் இதில் நடித்திருக்கிறார்கள்.

 

சித்தராக நாசர் சிறப்பாக நடித்திருக்கிறார். நிருபராக தம்பி ராமையா வழக்கம் போல் ஓவராக நடித்திருக்கிறார். விஜே விக்கி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

வெங்காய விலை ஏற்றத்திற்கு அமைச்சர் சொல்லும் பதில், தம்பி ராமையா கேட்கும் அரசியல் கேள்விகளுக்கு நாசர் சொல்லும் பதில் போன்றவை ரசிக்க வைத்தாலும், கதை என்னவோ ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அதே சமயம், கதையில் வைக்கப்பட்ட நான்கு கிளைமாக்ஸுகளும் நல்ல மெசஜை சொன்னாலும், நம் வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் ஏற்கனவே எழுதப்பட்டவை, என்று சொல்லும் மெசஜ் நம்மை முட்டாளுக்கும் விதமாக இருக்கிறது.

 

"மிரேஜ்"

 

வேலை விஷயமாக சென்னைக்கு வரும் பிரியா பவானி சங்கர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார். அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்களால் பதறிப்போகும் பிரியா பவானி சங்கர், அங்கிருந்து தப்பித்தாரா? இல்லையா?, அந்த அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை.

 

பிரியா பவானி சங்கர் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் மட்டுமே இந்த கதையில் நடித்திருக்கிறார். நட்டி மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

 

காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த இயக்குநர் ராஜேஷ், திகில் படத்தின் பக்கம் வந்திருக்கிறார். கதையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், படம் பார்ப்பவர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்புவதோடு, கதையில் என்னவோ நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால், படம் முடியும் போது இயக்குநர் ராஜேஷ் கொடுக்கும் முடிவு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது.

 

"கன்ஃபெக்‌ஷன்"

 

அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கும் அமலா பாலை, பிரசன்னா கொலை செய்ய முயற்சிக்கிறார். கொலை செய்யாமல் இருக்க வேண்டுமானால் அமலா பால் வாழ்க்கையில் செய்த தவறுகளை சொல்லுமாறு கேட்கிறார். அதன்படி தனது வாழ்க்கையில் நடந்த தவறுகளை பிரசன்னாவிடம் அமலா பால் ஒவ்வொன்றாக சொல்ல, பிரசன்னா அவரை கொலை செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

அமலா பால் மற்றும் பிரசன்னா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த கதையை வெங்கட் பிரபு தனது பாணியில் கிளுகிளுப்பாக இயக்கியிருக்கிறார். அமலா பால் கணவனிடம் பேசும் காட்சிகள் இளசுகளை ஈர்க்கும்படி உள்ளது. அமலா பால் இயல்பாக நடித்திருக்கிறார். பிரசன்னாவும் அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.

 

சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம், அதுவும் ஸ்னைபர் ஷாட் துப்பாக்கி என்பது எல்லாம் ஒட்டாத விஷயங்களாக இருக்கிறது. கதையின் இறுதியில் வரும் ட்விஸ்ட் ரசிக்கும்படியாக இருந்தாலும், அதன் பிறகு நடப்பவையும், படத்தின் இறுதிக்காட்சியும் முழுமை பெறாமல் இருப்பது படத்திற்கு பெரிய பலவீனம்.

 

இந்த நான்கு கதைகளும் ஒரே கருவை மையமாக கொண்டதாக தான் இருக்க வேண்டும். ஆனால், பா.இரஞ்சித்தின் ‘தம்மம்’ கதையை தவிர மற்ற மூன்று கதைகளும் ட்விஸ்ட் என்ற ஒரே கருவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த ட்விஸ்ட்டை மட்டுமே சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்களே தவிர, முழுமையான கதையாக சுவாரஸ்யமாக சொல்ல சற்று தடுமாறியிருக்கிறார்கள்.

 

இருந்தாலும், இரண்டு மணி நேரம் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் நான்கு கதைகளும், அதை படமாக்கிய விதமும் அமைந்துள்ளது.

 

"விக்டிம்" படத்திற்கு மதிப்பீடு 3/5


 

Verdict : "விக்டிம்" பார்க்கவேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA