சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_1421543219.jpeg

’கடாவர்’ விமர்சனம்

Directed by : Anoop S.Panicker

Casting : Amala Paul, Riythvika, Munishkanth, Harish Uthaman, Athulya, Thrigun

Music :Ranjin Raj

Produced by : Amala Paul

PRO : DOne

Review :

காவல்துறை தடவியல் நிபுணரான அமலா பால் தொடர்ச்சியாக மருத்துவர்கள் கொலைசெய்யப்படுவதை ஆராய்ந்து கொலையாளி ஒரே நபர் தான் என்பதை  தடவியல் மூலம் கண்டுபிடிக்கிறார். கொலையாளியை கண்டுபிடிக்க  நேரடியாக களத்தில் இறங்க பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன ?  என்பதுதான் "கடாவர்" படத்தின் கதை. 

 

தடவியல் நிபுணர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால், பாய்ஸ் கட்டிங், கண்ணாடி, நெற்றியில் விபூதி என வித்தியாசமாக காட்சியளிக்கிறார். தனது உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

 

கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, தனது துடிதுடிப்பான நடிப்பு மூலம் கவனம் பெறுவதோடு, தனது மரணம் மூலம் பதறவும் வைக்கிறார். 

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், அதுல்யாவின் கணவராக நடித்திருக்கும் திரிகுன், அமலா பாலின் உதவியாளராக வரும் வினோத் சாகர், முனிஷ்காந்த், ரித்விகா சிங் என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரங்களாகவும் இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் கேமரா திரில்லர் படங்களுக்கு ஏற்றவாறு பயணித்திருப்பதோடு, உடல் தடவியல் பரிசோதனை காட்சிகளை உண்மையாக நடப்பது போலவே காட்சிப்படுத்தி ஆச்சரியமூட்டுகிறது. அதிலும் அதுல்யா ரவியின் புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுப்பது, தடவியல் பரிசோதனை செய்யும் காட்சிகளில் வியக்க வைத்திருக்கிறார்.

 

ரஞ்சின் ராஜின் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. சோகமான சூழ்நிலையில் ஒலிக்கும் பாடல்கள் கூட கேட்பதற்கு சுகமாக இருக்கிறது. அளவான பின்னணி இசை மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.

 

மருத்துவத்துறையில் நடக்கும் குற்ற சம்பவத்தை சுற்றி கதை நகர்கிறது. ஏற்கனவே பல படங்களில் பேசப்பட்ட கரு என்பதால், சற்று வித்தியாசமாக காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். ஆனால், அவை சட்டென்று புரியும்படி இல்லாமல், தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் இருக்கிறது.

 

"கடாவர்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : ரசிகர்களை ரசிக்க வைக்கும் த்ரில்லர் படம்.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA