சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_1120571679.jpeg

’பொன்னியின் செல்வன்’ விமர்சனம்

Directed by : Manirathnam

Casting : Vikram, Jayam Ravi, Karthi, Aishwarya Rai, Trisha, Sarathkumar, Prakash Raj, Prabhu, Parthipan, Aishwarya Lakshmi

Music :AR Rahman

Produced by : Lyca Prodcutions - Subashkaran

PRO : Yuvaraj, Johnson

Review :

 

 

சோழ மன்னனின் சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் காதல் தோல்வியால் தஞ்சையில் இருந்து வெளியேறி பல்வேறு தேசங்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில்  தந்தையின் கட்டளைக்கிணங்கி சுந்தர சோழனின் இளைய மகனான அருண்மொழி வர்மன், இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்று இலங்கையை கைப்பற்றுகிறார். 

 

தஞ்சை அரியணையை கைப்பற்றுவதற்காக சுந்தர சோழரின் அண்ணன் மகன் மதுராந்தகனின் சதி திட்டம் ஒருபுறமும்  சோழர்களிடம் தோல்வியடைந்த பாண்டியர்கள் சோழ ராஜ்ஜியத்தை அழிப்பதற்கான சதி திட்டம் ஒருபுறமும் நடைபெறுகிறது. இதை அறிந்த முடி இளவரசர் ஆதித்த கரிகாலன் தன் நண்பன் வந்தியத்தேவன் மூலம்  தன் தந்தையும், மன்னருமான சுந்தர சோழருக்கும், தங்கை குந்தவைக்கும்   தகவல் அனுப்புகிறார். 

 

தகவல் அறிந்த இளவரசி குந்தவை, வந்தியதேவன் உதவியோடு, தனது சகோதரர்களின் உதவியோடு எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து தஞ்சை ராஜ்ஜியத்தை காப்பாற்ற திட்டம் போடுகிறார். குந்தவையின் திட்டம் என்ன அது வெற்றிபெற்றதா ?  தஞ்சை ராஜ்ஜியத்தை காப்பாற்றினாரா ?  என்பதே  ‘பொன்னியின் செல்வன் I" படத்தின் கதை. 

 

படத்தின் ஆரம்பமே ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் மாஸ் எண்ட்ரியோடு மிகவும் பிரமாண்டமாக ஆரம்பிக்கிறது படம்.  

 

வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தி குறும்பும் குத்தாட்டமுமாகவும் அதே சமயம் சாமர்த்தியமாக பேசித் தப்பிப்பது. என படம் முழுக்க பயணிக்கிறார். ஜெயராமும், கார்த்தியும் இணைந்த நகைசுவை காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

 

அருண்மொழி வர்மன் வேடத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி இடைவேளைக்கு பிறகு வந்தாலும், படத்தின் பிற்பகுதி முழுவதும் கார்த்தியுடன் சேர்ந்து கலக்கியிருக்கிறார். 

 

குந்தவையாக நடித்திருக்கும் திரிஷா அழகு பதுமையாக வலம் வந்தாலும், ராஜ்யத்தை காப்பாற்ற சகோதரர்களை வரவழைத்து திட்டம் போடும்போதும் கண்களாலேயே மிரட்டியிருக்கிறார். 

 

நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், பெரிய பழவேட்டையர் வேடத்தில் நடித்திருக்கும் சரத்குமார், சிறிய பழவேட்டையர் வேடத்தில் நடித்திருக்கும் பார்த்திபன், சுந்தர சோழர் வேடத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் அவர்களுடைய கைதேர்ந்த நடிப்பால் அந்த அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். 

 

ரவிவர்மனின் ஒளிப்பதிவு நம்மை 9ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கிறது. காட்சிகளை பிரமாண்டமாக காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். கதாப்பாத்திரங்களை உணர்வுபூர்வமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக சிரத்தை எடுத்திருக்கிறார். 

 

விக்ரம் பிரபு, சோபியா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, லால், மோகன் ராம், வினோதினி, நிழல்கள் ரவி, அஸ்வின், ரகுமான் என பலர் நடித்துள்ளனர். 

 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை  கதைக்கு ஏற்றவாறு பயனுக்கிறது. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறது. கடைசி 15 நிமிடங்கள் தம்முடைய இசையால் அந்த கதைக்குள்ளேயே நம்மை சிக்கவைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 

 

தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான நாவலாக கருதப்படும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டாம் பாகத்தை பார்க்கும் அவளை தூண்டும்படியாக கதையை முடித்திருக்கிறார் மணிரத்னம்.

 

நடிகர்கள் தேர்வு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அரச குடும்பத்தினராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.  பழிவாங்கல், நயவஞ்சகம் என அரசியல் சதுரங்கத்தில் நடக்கும் சம்பவங்களை ரசிகர்களிடம்  உணர்வு ரீதியாக கொண்டு சேர்த்திருக்கிறார்கள். 

 

"பொன்னியின் செல்வன்" படத்திற்கு மதிப்பீடு 4/5 

 

 

Verdict : 'பொன்னியின் செல்வன்' மனதை கவர்ந்துள்ளது

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA