சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_1894618904.jpeg

'சர்தார்’ விமர்சனம்

Directed by : PS Mithran

Casting : Karthi, Rashi Khanna, Rajisha Vijayan, Laila, Changi Pandey,

Music :GV Prakash Kumar

Produced by : Prince Pictures - Lakshman Kumar

PRO : Johnson

Review :

ராணுவ உளவாளியாக பணிபுரியும் அப்பா கார்த்தி இந்திய ராணுவத்தால் தேசத்துரோகி என குற்றம் சட்டப்படுகிறார். இதனால் அவருடைய மொத குடும்பமும் தற்கொலை செய்துகொள்கிறது. அவருடைய மகன் கார்த்தியை அவனுடைய சித்தப்பா முனீஷ்காந்த் வளர்க்கிறார். பிற்காலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும்  கார்த்தி சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்புகிறார்.  மறுபுறம் தண்ணீரைத் தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் லைலா கொலை செய்ய படுகிறார். அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும்போது. லைலா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சர்தார் என்ற உளவாளியை வெளியே கூட்டிவர லைலா முயற்சி இருப்பதும் கார்த்திக்கு தெரிய வருகிறது. லைலாவை கொன்றது யார்? அப்பா கார்த்தி செய்த தவறு என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார்? இறுதியில் அவர் காப்பாற்றப்பட்டாரா? இந்தியாவுக்கு எதிரான சதி திட்டம் என்ன? அதை முறியடித்தார்களா? என்பது தான் ‘சர்தார்’ படத்தின் கதை.

 

அப்பா, மகன் என இரட்டை வேடங்களிலும் நடிப்பில் கார்த்தி மைல் கல்லை தொட்டிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க ஸ்டன்ட்டுகளை செய்து தியேட்டரில் கைதட்டல் பெறுகிறார். சர்தார் கதாபாத்திரத்தில் விதவிதமான கெட்டப்பில் மாஸ் காட்டியுள்ளார். கார்த்தியின் நடிப்பு படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மையும் படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.

 

மகன் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷி கன்னா மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். 

 

அப்பா கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், நடிப்பிலும் சரி, அழகிலும் சரி ஈர்க்கும் வகையில் இருக்கிறார்.

 

நீண்ட நாள் கழித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த லைலாவை கதையின் முக்கியமான திருப்பத்துக்கு உதவும் கதாபாத்திரம். நல்ல ரீ என்ட்ரி  

 

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். 

 

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளில் அதிரடியாகக் கோணங்களை மாற்றி அப்ளாஸ் அள்ளுகிறது. '

 

இன்றைய சூழலில் குடிதண்ணீரில் நடக்கும் ஊழல்களையும் அதில் இருக்கும் ஆபத்துகளையும், பிளாஸ்டிக் குடிநீர் குறித்த விழிபுணர்வை மக்களுக்கு தெளிவாக கொண்டுசேர்க்கும் முயற்சியே "சர்தார்"

 

"சர்தார்" படத்திற்கு மதிப்பீடு 4/5 

 

 

Verdict : தீபாவளிக்கு தரமான கொண்டாட்டம் "சர்தார்"

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA