சற்று முன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கும் 'மைக்கேல்'   |    நானியின் மிரட்டலான 'தசரா' திரைப்பட டீசரை வெளியிட்ட பிரபல திரை நட்சத்திரங்கள்!   |    வாத்தியுடன் போட்டிபோடும் 'பகாசூரன்'   |    2 நிமிடங்கள் 23 வினாடிகள் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக உருவான 'தக்ஸ்'...   |    எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது - சுஹாசினி மணிரத்னம்   |    ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்சனோடு களம் இறங்கும் ராக்கிங் ஸ்டார் !   |    ஆர். ஜே. பாலாஜிக்கு காமெடி பண்ற சூழ்நிலை இல்லை !   |    கேரளாவில் நடைபெற்ற அழகி போட்டியில் வென்ற சென்னை பொண்ணு!   |    கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்   |    நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து, நாங்கள் சொகுசாக வாழ்கிறோம் - ஆர்.ஜே.பாலாஜி   |    Disney Hotstar வெளியிட்ட பிரபல நடிகையின் திருமண விழாக்கால கொண்டாட்டத்தின் பர்ஸ்ட் லுக்   |    பிரபல ஸ்ட்ரீமிங் தளம் அறிவித்துள்ள அடுத்த தொடரின் அறிவிப்பு   |    “பாயும் ஒளி நீ எனக்கு ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் புதிய இயக்குனர்   |    லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனராக அறிமுகம் !   |    கிராமிய திருவிழா அரங்கத்தில் வெளியான ஹிப் ஹாப் தமிழா ஆதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!   |    இன்று செல்போன் பிரச்சினையை விட சாராயக்கடை பிரச்சினைதான் பெரிதாக உள்ளது - ஜாக்குவார் தங்கம்   |    தமிழ்த் திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - '90'ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்'!   |    கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் வாழ்வியலே 'நெடுமி'   |    புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடிகர் சிவகுமார் வழங்கும் 'திருக்குறள் 100'   |    ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலரிலேயே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்த 'G2' படம் !   |   

croppedImg_752194997.jpeg

'பட்டத்து அரசன்’ விமர்சனம்

Directed by : A.Sarkunam

Casting : Atharva, Rajkiran, Ashika Ranganath, Radhika, Jayaprakash, Durai Sudhakar, Singam Puli, Ravikale, Sathru, Raj Iyappan

Music :Ghibran

Produced by : Lyca Productions - Subashkaran

PRO : DOne

Review :

கபடி வீரரான ராஜ்கிரண் ஊரின் பெரிய மனிதராக வாழ்ந்து வரும் ராஜ்கிரணுக்கு இரண்டு மனைவிகள். மக்கள் இவருக்கு சிலை வைக்கும் அளவுக்கு மரியாதையை கொண்டுள்ளனர். இவருடைய முதல் மனைவியும் மகனும் இறந்துவிட்ட  நிலையில் இரண்டாவது மனைவி மற்றும் அவருடைய மகன் மருமகள் பேரன் பேத்தி என வாழ்ந்துவருகிறார். இறந்து போன மூத்த மனைவியின் மகனின் மனைவியான ராதிகாவும், மகனுமான அதர்வாவும் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பேரனான அதர்வாவோ எப்படியாவது தாத்தா குடும்பத்துடன் சேர முயற்சித்து வருகிறார். குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? அதற்கு என்ன முயற்சிகள் எடுத்தார்? அந்த முயற்சிகள் வெற்றி பெற்றதா? என்பதுதான் "பட்டத்து அரசன்" படத்தின் கதை 

 

கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார் . அவருக்கு கொடுக்கப்பட்டு பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். காதல் காட்சிகளில் அளவாக நடித்திருப்பவர் செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் குடும்ப பாச காட்சிகளிலும் கைத்தட்டல் பெறுகிறார்.

 

குடும்பத் தலைவர் ராஜ்கிரண், மூன்று விதமான கெட்டப்புகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். கபடி விளையாடும் இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலிக்கிறார்.

 

ராதிகா சரத்குமார், ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி, பால சரவணன் என படத்தில் நடித்த பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர். 

 

ஜிப்ரானின் பின்னணி இசைக்கோர்ப்பு காட்சிகளுக்கான தரமான வார்ப்பு. லோகநாதன் ஒளிப்பதிவில் கபடி ஆட்டங்கள் களைக்கட்டுகின்றன. 

 

சிங்கம் புலி கொஞ்சம் கொஞ்சம் காமெடி செய்கிறார், பாலா சரவணன் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். 

 

கபடி விளையாட்டை மையமாக வைத்து கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

 

 "பட்டத்து அரசன்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : கிராமத்தையும், விளையாட்டையும் ஒன்றிணைக்கும் கதை.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA