சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_972660134.jpeg

’வி 3’ விமர்சனம்

Directed by : Amudhavanan

Casting : Varalaxmi Sarathkumar, Paavana, Esther Anil, Adukaalam Naren, Chandra Kumar, Ponmudi, Jai Kumar, Sheeba

Music :Allen Sebastian

Produced by : Team A Ventures

PRO : AIM

Review :

"வி 3" அமுதவாணன் இயக்கத்தில் டீம் எ வெஞ்சுரஸ்    தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ஆலன் செபாஸ்டியன். இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பாவனா, எஸ்தேர் அனில், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

ஆடுகளம் நரேன் பாவனா மற்றும் எஸ்தேர் என்ற  தன் இரண்டு மகள்களோடு வாழ்ந்து வருகிறார். இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கற்பழிக்கப்பட்ட பாவனாவிற்கு நீதி கேட்டு போராட்டம் வெடிக்கிறது. அந்த வழக்கு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்த அக்குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி ஐந்து இளைஞர்களைக் காவல்துறை சுட்டுக்கொல்கிறது. இறந்த அந்த ஐவரின் உடல்களை பெற்றவர்களிடம் கொடுக்க காவல்துறை மறுக்கிறது. இதனால் அவர்கள் போராட்டம் நடத்த அவர்களை     காவல்துறை கடுமையாக தாக்குகிறார்கள். இதனால்  இந்த வழக்கு மனித உரிமை ஆணையத்திடம் கைமாறுகிறது.  மனித உரிமை அதிகாரியான வரலட்சுமி சரத்குமார், வழக்கை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது. அவை என்ன? உடல்களை தர மறுக்கும் காரணம் என்ன? உண்மையில் நடந்தது என்ன? என்பதே  "வி 3" படத்தின் கதை.

 

வரலட்சுமி சரத்குமார் மனித உரிமை சிறப்பு அதிகாரியாக நடித்துள்ளார். குறைவான வசனங்கள் பேசி அமைதியாக நடித்தாலும் பார்வையாலும், நடிப்பாலும் கம்பிரமாக மிரட்டியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை தனக்கே உண்டான மிடுக்கான நடிப்பால் அசத்தியிருக்கிறார். 

 

பாதிக்கப்பட்ட பெண்ணாக பாவனா நடிப்பில் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். மனதை உலுக்கும் கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். 

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையாக நடித்திருக்கும் எஸ்தேர் அனில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகம் பற்றி கேட்கும் கேள்வியில் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

 

தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் மகளுக்கு நடந்த கொடுமையை தாங்கமுடியாமல் அழும் காட்சிகளில் பார்ப்பவர்களையும் அழ வைத்துவிடுகிறார். ஒரு நடுத்தர வர்க்க தந்தையாக தன்னுடைய நடிப்பில் கன கட்சிதமாக பொருந்தி  நடித்திருக்கிறார் .

 

சந்திரகுமார், பொன்முடி, ஜெய்குமார், ஷீபா என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

லைவ் லொக்கேஷன்களில், கிடைத்த வெளிச்சத்தில் மிக நேர்த்தியாக காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சிவா பிரபு, கதைக்கு ஏற்ப கச்சிதமாக காட்சிகளை கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். 

 

இசையமைப்பாளர் எலன் செபஸ்டியன் இசை கதையோடு பயணிக்கிறது.

 

கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். போலி என்கவுண்டர்கள், அரசியல்வாதிகளின் மற்றொரு முகம், அநீதி இழைக்கப்படும் பெண்களுக்கு நீதி என பல முக்கிய பிரச்சனைகளை படத்தின் வாயிலாக பேசியிருக்கிறார். பாலியல் குற்றங்கள் நடந்த பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வலியுறுத்தி போராடும் பொதுமக்கள், குற்றங்கள் நடக்காமல் தடுக்க, அதற்கான தீர்வை செயல்படுத்துவதற்காக போராட வேண்டும், என்ற கருத்தை முன் வைத்துள்ள இயக்குனரின் சிந்தனை வியக்கத்தக்கது. 

 

"வி 3​​" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுக்க தீர்வை கூறும் நல்ல முயற்சி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA