சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_1406409723.jpeg

’அயலி’ இணையத் தொடர் விமர்சனம்

Directed by : Muthu Kumar

Casting : Abinayashree, Anumol, ARUVI Madhan, Lingaa, Singampuli, TSR Srinivasamoorthy, Lovelyn, Gayathri, Thara, Melodi, Pragadheeswaran

Music :Revaa

Produced by : Kushmavathi

PRO : AIM

Review :

 

 

"அயலி" முத்துக்குமார் இயக்கத்தில் குஷ்மதி தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ரேவா. இந்த படத்தில் அபிநயஸ்ரீ, அனுமோல், அருவி  மதன், லிங்கா, சிங்கம்புலி, TSR ஸ்ரீனிவாசமூர்த்தி, லவ்லின், காயத்ரி, தாரா, மெலோடி, பிரகதீஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

அயலி என்ற பெண் தெய்வத்தின் பெயரை சொல்லி பெண் குழந்தைகள் பருவமெய்திய சில மாதங்களிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும், என்ற ஊர் கட்டுப்பாடு கொண்ட கிராமம். இதனால் ஒன்பது வகுப்புக்கு மேல் எந்த பெண் குழந்தைகளும் கல்வி பயில முடியாத சூழ்நிலையில் மருத்துவராகவேண்டும் என்ற கனவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி அபிநயஸ்ரீயின் கனவு நிறைவேறியதா? அதற்காக அபிநயஸ்ரீ எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? கடவுள் தண்டித்ததா? ஊர் மக்கள் கட்டுப்பாடுகளை தகர்த்தனரா? என்பதை கிராமத்து பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரம் கலந்து 1990ம் காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளதே "அயலி" என்ற இணையத் தொடர்.

 

தமிழ் செல்வியாக அபி நட்சத்திரா வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படிக்க வேண்டும் என்ற கனவை சுமந்து இடையில் வரும் தடைகளை தனது குழந்தைத்தனத்தோடு தகர்த்தெறிந்து தொடர் வெற்றி பெறுவது, என்று அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார். சிறுமியாக துள்ளலும் எந்த கட்டுப்பாடும் தன்னை பாதிக்காது என்ற அலட்சியமும் கலந்த வித்தியாசமான நடிப்பை தந்துள்ளார்.

 

தமிழ்செல்வியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல், தமிழ்செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன், வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் லிங்கா, சிங்கம்புலி, வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர்.சீனிவாசமூர்த்தி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

 

பெண்கள் இத்தகைய கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில் எத்தகைய மனத்தடைகளை உடைத்து கல்வி பயின்றார்கள், இன்றைய சூழலில் பெண்கள் பலர் தங்குதடையின்றி உயர்கல்வியை கற்கிறார்கள்.  என்பதை இயக்குநர் முத்துக்குமார் யதார்த்தமாக பதிவு செய்தது பாராட்டுக்குரியது. 

 

ரேவாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தோடு ஒன்றியிருக்கின்றன. பின்னணி இசை தொடரின் கருத்துகளை மேம்படுத்திக் காட்ட உதவுகிறது.

 

ராம்ஜியின் ஒளிப்பதிவில் கிராம மக்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காட்சிகளுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார்.

 

பெண் பருவமெய்தலை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயம் என்று இன்னும் பழமையோடு வாழும் மக்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கும் இயக்குநர், எவ்வளவு சாதாரணமான ஒரு விஷயத்தை மூட நம்பிக்கையால் எவ்வளவு பெரிய விஷயமாக்கி மக்களை முட்டாளாக்குகிறார்கள், என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.

 

"அயலி" படத்திற்கு மதிப்பீடு 4/5

 

Verdict : பெண்கல்விக்கு உயிரூட்டும் கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA