சற்று முன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |    வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள் - ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ்   |    எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது: இயக்குநர் கதிர் பேச்சு!   |    ஓடிடி தளத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'டார்க் ஃபேஸ்’!   |    பொதுவாக ஈழத் தமிழர்கள் படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும் - சசிகுமார்   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 24 முதல் ப்ளாக்பஸ்டர் 'எம்புரான்' ஸ்ட்ரீமாகிறது!   |    ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!   |    ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில் 'கலியுகம்' பட வெளியீட்டு தேதி போஸ்டர் வெளியானது!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) ரிலீஸ், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!   |    வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும் - ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா   |    'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது!   |    உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! - கே.ராஜன்   |   

croppedImg_2105822214.jpeg

'ராஜாமகள்' விமர்சனம்

Directed by : Henry

Casting : Aadukalam Murugadoss, Velina, Baby Prithiksa

Music :Shankar Rajan.

Produced by : Moon Walk Pictures

PRO : Kumaresan

Review :

 "ராஜா மகள்" ஹென்றி இயக்கத்தில் மூன் வாக் பிக்சர்ஸ்   தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை சங்கர் ரங்கராஜன். இந்த படத்தில்  ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா  மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. 

 

பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வரும் முருகதாஸ், மகள் மீது கொண்ட அளவில்லா பாசத்தால் மகள் எதைக் கேட்டாலும் அதை முடியாது எனக் கூறாமல் உடனே வாங்கித் தந்து விடுகிறார். ஒருகட்டத்தில் பங்களா போன்ற வீட்டை கேட்கும் மக்களிடம் அதையும்  வாங்கித் தருவதாக கூறிவிடுகிறார். இதனால், ஒரு சில நாட்களில் பங்களாவிற்கு சென்று விடுவோம் என்ற கனவோடு இருக்கும் மகளின் கனவி நிறைவேற்றப்பட்டதா? இதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்பட்டது? என்பதை அப்பாக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தோடு கூறியிருப்பதே "ராஜாமகள்" படத்தின் கதை.

 

தந்தையாக நடித்திருக்கும் முருகதாஸ் மகளை ஓடிச் சென்று அணைக்க முடியாமல் மரத்திற்கு பின்னால் நின்று கொண்டு கண்ணீர் சிந்தும் காட்சியில், படம் பார்ப்பவர்களின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார் முருகதாஸ். க்ளைமாக்ஸ் காட்சிகள் அப்ளாஷ்

 

படத்தின் அடுத்த பெரிய பில்லராக வந்து நிற்பவர் சிறுமியாக நடித்த ப்ரதிக்‌ஷா தான். கண் பார்வையிலேயே ஆயிரம் எக்‌ஷ்பிரஷன்களை கொண்டு வந்து நிற்கிறார் ப்ரதிக்‌ஷா. உண்மையான தந்தை மகளுக்கான பாசத்தை காட்டுவது போன்ற ஒரு உணர்வை கொண்டு வந்து நிறுத்தி விட்டார் ப்ரதிக்‌ஷா.,

 

ஆடுகளம்,குட்டிப்புலி என பல படங்களில் தனது கதாபாத்திரத்தின் நடிப்பில் முத்திரைப் பதித்த முருகதாஸ், இப்படத்திலும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார்.

 

நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சியை அழகூற கொடுத்திருக்கிறது. சங்கர் ரங்கராஜனின் இசை கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது.

 

கதையின் மூலக்கரு சிறியதாக இருந்தாலும், அதன் வலி வீரியமானது என்பதை கொண்டு எடுக்கப்பட்ட இந்த “ராஜாமகள்” கைதட்டல் பெறுகிறாள்.

 

"ராஜாமகள்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : அனைத்து பெற்றோரும் பார்க்கவேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA