சற்று முன்

ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |   

croppedImg_62243813.jpeg

'ரஸாகர்’ விமர்சனம்

Directed by : Yata Satyanarayana

Casting : Bobby Simha, Tej Sapru, Makarand Deshpande, Raj Arun, Vedhika, AnnusriyaTripathi

Music :Bheems Ceciroleo

Produced by : Samarveer Creations LLP

PRO : AIM

Review :

"ரஸாகர்" திருமலா எம்.திருப்பதி இயக்கத்தில் சமர்வீர் கிரியேஷன்ஸ் LLP தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பீம்ஸ் சிசிரோலியோ. இந்த படத்தில் மகரந்த் தேஷ் பாண்டே, ராஜ் அர்ஜூன், வேதிகா, பாபி சிம்ஹா, தேஜ் சப்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த பல சமஸ்தானங்கள் ஒன்றினைக்கப்பட்டது. அப்படி இந்தியாவுக்குள் இருந்தாலும் தனி ராட்சியம் செய்துக்கொண்டிருந்த ஐதரபாத், இந்தியாவுடன் இணைய மறுத்ததோடு,  துருக்கிஸ்தான் என்ற தனி நாடாக உருவெடுப்பதற்கான முயற்சியில் இறங்கியது. அவர்களுடைய முயற்சியை இந்தியா எப்படி முறியடித்து, ஐதராபாத் சமாஸ்தானத்தை இந்துஸ்தானுடன் இணைத்தது? என்ற வரலாற்று உண்மையை விவரிப்பது தான் ‘ரஸாகர்’ படத்தின் கதை.

 

இதுவரை சொல்லப்படாத வரலாற்று உண்மைகளை மையமாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள், ஐதராபாத் சமஸ்தானத்தை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள், அங்கிருந்த இந்துக்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பதை மட்டுமே விவரித்துள்ளது.

 

ஐதராபாத்தை ஆண்ட மிர் உஸ்மான் அலிகான் வேடத்தில் நடித்திருக்கும் மகரந்த் தேஷ் பாண்டே, அசிம் ரஸ்வி வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் அர்ஜூன், சந்தாவாவாக நடித்திருக்கும் வேதிகா, எம்மடி ராஜி ரெட்டியாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சர்தார் வல்லபாய் பட்டேல் வேடத்தில் நடித்திருக்கும் தேஜ் சப்ரு உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் குஷேந்தர் ரமேஷ் ரெட்டியின் உழைப்பு அனைத்துக் காட்சிகளிலும் மிளிர்கிறது. பீம்ஸ் சிசிரோலியோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

 

1947ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், துப்பாக்கிகள், கிராமம் என்று கலை இயக்குநர் திருமலா எம்.திருப்பதியின் அபாரமான பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

இதுவரை யாரும் சொல்லாத வரலாற்று உண்மையை ரத்துமும், சதையுமாக சொல்லியிருக்கும் இயக்குநர் யதா சத்யநாராயணா, படம் முழுவதும் இந்துக்களுக்கு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளை மட்டுமே விவரித்திருப்பது படத்தை பலவீனப்படுத்துகிறது.

 

ஆட்சியாளர்களின் அரஜாகங்களை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுவதை தவிர்த்துவிட்டு, அரசியல் ரீதியான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றிருந்தால் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

 

"ரஸாகர்" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

Verdict : வன்முறை நிறைந்த படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA