சற்று முன்

'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |    தசரா பண்டிகை முன்னிட்டு, மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' பட டீசர் வெளியானது!   |    BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்!   |    அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள்; பிக்பாஸ் சீசன் 8!   |    சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது குளோபல் ஸ்டார் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'   |    'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்   |    பிரைம் வீடியோ வெளியிட்ட ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லர்   |    வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம் 'விடுதலை பார்ட்2' பட டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!   |    PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ 'மஹாகாளி'   |    தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’   |    பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’   |    அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |   

croppedImg_744926311.jpeg

’PT சார்’ விமர்சனம்

Directed by : Karthik Venugopalan

Casting : Hiphop Tamizha, Kashmira Pardeshi

Music :Hiphop Tamizha

Produced by : Dr.Ishari K Ganesh

PRO : Yuvaraj

Review :

"PT சார் " கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழா. இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா, காஷ்மீரா பர்தேசி, தியாகராஜன், K.பாக்யராஜ், இளையதிலகம் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர் 

 

சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT வாத்தியாராக பணிபுரிபவர் தான்  ஹிப் ஹாப் ஆதி.

ஆதி, எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என நினைப்பவர். அதற்கு காரணம் அவரது அம்மா தேவதர்ஷினி, ஜாதகத்தை நம்பியதுதான். 

இந்த சமயத்தில் ஆதி தனது தங்கையாக நினைக்கும் அனிகாவிற்கு கல்லூரி நிறுவனத்தில் இருந்து பிரச்சனை ஒன்று ஏற்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதே "PT சார்" படத்தின் கதை.

 

இசையமைப்பில் ஹிப் ஹாப் ஆதிக்கு இது 25வது படம். பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்து விடுகிறார். மேலும் இயல்பான நடிப்பிலும் அப்லாஸ் வாங்கிவிடுகிறார். 

 

படத்தில் தியாகராஜன் பணக்கார  வில்லனாக வந்து மிரட்டுகிறார். இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், ராஜா, தேவதர்ஷினி, வினோதினி என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் கதை ஒரு மையக் கருத்தை நோக்கியே நகர்வதால் இவர்களுடைய நடிப்பு தனியாக தெரியவில்லை. 

 

ஆனால் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்  நடிகை தேவதர்ஷினி எப்பொழுதுமே மிகையாக நடிப்பவர், இந்தப் படத்தில் அளவாக நடித்திருக்கிறார். அதேபோல் நடிகை வினோதினி எப்பவுமே அளவாக நடிப்பவர், இந்தப் படத்தில் சற்று மிகையாகவே நடித்து இருக்கிறார். 


வழக்கம்போல் இல்லாமல் நடிகர் இளவரசுவின் நடிப்பு மிக மிக எதார்த்தம்.


'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' திரைப்படத்தில் பேசியது போலவே இப்படத்திலும் சமுதாய அக்கறையோடு இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் தனது இயக்கத்தின் மூலம் பேசியுள்ளார். 

 

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படத்தில் காட்டிய விதம் அருமை. Sexual Harassment என்பது ஒரு சிறு குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை, எந்த அளவிற்கு பெண்களை பாதித்திருக்கிறது என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலமாக நிரூபித்து விட்டார். 

 

ஒரு நல்ல படம் என்ன என்பது, ஒரு மனிதன் அந்தப் படத்தை பார்த்து வெளியே வரும் போது அதே உணர்வுடன் சென்றால் அதுதான் சிறந்த படம் என்று சுஜாதா அடிக்கடி சொல்வார். அதை இந்தப் படம் கடத்தி விடுகிறது. 

 

ஆனால் அதையே சற்று நேரம் கழித்து யோசித்துப் பார்த்தால், உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்றும் இல்லாதது போல், இந்தக் கதையில் கடைசியாக என்ன சொல்ல வருகிறார்கள், இது எப்படி நடைமுறை வாழ்க்கையில்  சாத்தியமாகும்  என்று கேள்வியை எழுப்புகிறது? 

 

கள்ளக்குறிச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு, கமர்சியல் திரை கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். ஆனால் படத்தின் முதல் பாதியை கொஞ்சம் குறைத்து இருந்திருக்கலாம். 

 

 "PT சார்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : PT சார், பருவப் பெண்களும் ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு கதைக் கருவுள்ள படம்.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA