சற்று முன்

‘பேச்சி’ விமர்சனம்
Directed by : Ramachandran.B
Casting : Gayathrie, Bala Saravanan, Preethi Nedumaaran, Dev, Jana
Music :Rajesh Murugesan
Produced by : Veyilon Entertainment - Gokul benoy and Verus Productions - Shaik Mujeeb, Rajarajan, Sanjay Shankar, Dhanishtan Fernando
PRO : Suresh Sugu Dharma
Review :
"பேச்சி" ராமச்சந்திரன்.எம் இயக்கத்தில் வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ராஜேஷ் முருகேசன். இந்த படத்தில் காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காட்டுக்குள் ட்ரெக்கிங் போகும் ஒரு கும்பல் விதியை மீறி தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு லோக்கல் கைடாக வரும் பால சரவணன், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் இதைச் செய்கிறார்கள். இதனால் பலவிதமான அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள். இந்த மாய வலையில் இருந்து தப்பித்தார்களா அல்லது மாட்டிக் கொண்டார்களா என்பதன் படத்தின் கதை கரு..!
படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை மிகவும் மெதுவாகவே செல்வதால், ஒரு விதவமான சலிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தப் படத்தின் இசை ஒரு மிகப்பெரிய பின்புலமாக இருந்தாலும், கதையில் தேவையில்லாத சில லாஜிக் மிஸ்டேக்ஸ் இருப்பதால், படத்தை நம்மால் ஒன்றி பார்க்க முடியாமல் போய்விடுகிறது.
கதையில் சூனியக்கார கிழவியாக வரும் அந்த பாட்டி, எதற்காக சூனியம் மற்றும் நரபலி செய்கிறார் என்பதில் ஒரு தெளிவு இல்லை. 80 வருட காலங்களாக அடைபட்டு இருந்த பேயை ஏன் விடுவித்தார்கள் எப்படி விடுவித்தார்கள் என்ற புரிதலும் இல்லை.
படம் முழுவதும் வனப்பகுதியில் நகர்வதால் ஒளிப்பதிவு மிகவும் இயற்கையாகவும் நேர்மையாகவும் உள்ளது என்பதை சொல்ல வேண்டும்.
திரை பிம்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், கதைக்கும் கதாபாத்திர நடிகர்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவமும் கொடுத்திருக்கலாம். ஏனென்றால் சில நடிகர்களின் நடிப்பு மக்களோடு இணையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இறுதிக் காட்சியில் வரும் டிவிஸ்ட் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றே. அதற்கு கூடுதல் கவனமும் செலுத்தி இருக்கலாம்.
"பேச்சி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : பேச்சி காட்டை காப்பாற்றும் வனப்பேச்சி அல்ல.. காட்டை மக்களை அழிக்க வரும் பேய் ஆச்சி
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA