சற்று முன்

ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |    நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்ற தத்ரூபமாக காட்சிகளுடன் வெளிவரவிருக்கும் 'தென் சென்னை'   |    ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் 'ஹேப்பி எண்டிங்' டைட்டில் டீசர் வெளியீடு!   |    ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!   |   

croppedImg_1414569348.jpeg

'தில் ராஜா’ விமர்சனம்

Directed by : A.Venkatesh

Casting : Vijay Sathya, Sherin, A.Venkatesh, Vanitha Vijayakumar, Samyuktha, Iman Annachi, Vijay TV Bala, Gnanasamandam, Ammu, Lollu Saba Manohar, Mukkuthi Murugan

Music :Amrish

Produced by : Golden Eagle Studio - Covai Balasubramaniyam

PRO : Bhuvan

Review :

'தில் ராஜா’  ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் – கோவை பாலசுப்ரமணியம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சின்ஹா படத்திற்கு இசை அம்ரீஷ். இந்த படத்தில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், சக்யுக்தா, ஷெரின், கு.ஞானசம்பந்தம், பாலா, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது, எதிர்பாராத பிரச்சனை ஒன்று அவர்களை துரத்துகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது.  இதனால், ஒரு பக்கம் வில்லன் கோஷ்ட்டி மறுபக்கம் காவல்துறை துரத்த, குடும்பத்துடன் வாழ்வா...சாவா...!, என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி மீள்கிறார்? என்பதை கமர்ஷியலாகவும், திரில்லராகவும் சொல்வது தான் ‘தில் ராஜா’.

 

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருந்தாலும், தனது பலமான கமர்ஷியல் ஃபார்மூலாவை பக்கவாக கையாண்டு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக மட்டும் இன்றி திரில்லர் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்துகிறார். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக போருபவர், தன்னை சுற்றி பதற்றமான சூழல் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். 

 

விஜய் சத்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஷெரின், பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் நாயகியாக வலம் வருகிறார்.

 

அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் ஆரவாரம் செய்யாமல் மிரட்டுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வேலை இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. 

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தாவின் காக்கி சட்டை சீருடையை மறந்து அவரை ரசிக்கும் அளவுக்கு கவர்ச்சியாக வலம் வருகிறார். கடமை தவறாத காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் அளவுக்கு அதிகமான மேக்கப் போட்டு எடுப்பாக வலம் வருகிறார்.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி பாலாவின் நையாண்டி வசனங்கள் சில சிரிக்க வைக்கிறது. அவருக்கு ஈடுகொடுத்து கவுண்டர் அடிக்கும் இமான் அண்ணாச்சியின் காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை.

 

கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் முகம் காட்டும் வேலையை செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணாவின் கேமரா சேசிங் காட்சிகளை வேகமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை அமர்க்களமாகவும் படமாக்கியிருக்கிறது.

 

அம்ரீஷ் இசையில், நெல்லை ஜெயந்தன் மற்றும் கலைகுமார் வரிகளில் பாடல்கள் அனைத்தும் அக்மார்க் கமர்ஷியல் அம்சங்கள். பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.

 

வழக்கமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படம் என்றாலும் படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், நான் லீனர் முறையில் காட்சிகளை தொகுத்து, படம் முழுவதையும் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைத்திருக்கிறார். 

 

கதையையும், கதாநாயகனையும் மக்களுக்கு பிடித்தவாறு கையாளக்கூடிய இயக்குநர்களில் முக்கியமானவரான இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தனது வழக்கமான ஆக்‌ஷன் கமர்ஷியல் ஃபார்மூலாவுடன் திரைக்கதை அமைத்திருந்தாலும், அதில் திரில்லர் என்ற கூடுதல் அம்சத்தை சேர்த்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

நாயகனுக்கு ஏற்பட்ட சிக்கல், அதில் நாயகனும், அவரது குடும்பமும் சிக்கிக்கொண்டது எப்படி?, அதில் இருந்து மீள்வதற்கான அவர்களது போராட்டம், ஆகியவற்றை பல திருப்பங்களுடன் சொல்லி படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கமர்ஷியல் ரசிகர்களை திருப்திப்படுத்தும் முழுமையான ஆக்‌ஷன் திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 

 

"தில் ராஜா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : கமர்ஷியல் ஆக்‌ஷன் திரில்லர்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA