சற்று முன்

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |    நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படம் 'பரோஸ்'   |    சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும் அதுபோல கேம் சேஞ்சர்...   |    கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம் - எழுத்தாளர் கமலா   |    நடிகர் ஆர்யா அண்ணாநகரில் திறந்து வைத்த பிரியாணி கடை!   |    'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |   

croppedImg_253424904.jpeg

’லைன்மேன்’ விமர்சனம்

Directed by : M.Udhaykumar

Casting : Jegan Balaji, Saranya Ravichandran, Charli, Adithi Balan

Music :Deepak Nandhakumar

Produced by : Suriya Narayana

PRO : Nikil murukan

Review :

"லைன்மேன்" எம்.உதய்குமார் இயக்கத்தில் சூர்ய நாராயணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தீபக் நந்தகுமார். இந்த படத்தில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள உப்பளம் மின் மையத்தில் லைன்மேனாக சார்லி பணியாற்றி வருகிறார். மின் பொறியியல் பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, தனது கண்டுபிடிப்புகள் மூலம் எளிய மக்களுக்கு உதவ நினைக்கிறார். அதற்காக மின் விளக்குகளை ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கான தானியங்கி கருவி ஒன்றை அவர் உருவாக்குகிறார். அதற்கு அங்கீகாரம் பெறுவதற்காக முயற்சிக்கும் அவருக்கு செல்லும் இடம் எல்லாம் தோல்வி மட்டுமே கிடைக்க, துவண்டு போகாமல் தொடர்ந்து பயணிக்கிறார். ஆனால், முதலாளிகள் மூலமாக அவரது கண்டுபிடிக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, அந்த சதிகளில் இருந்து மீண்டு தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘லைன்மேன்’.

 

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஒரு எளிய மனிதர் தனது புதிய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு எத்தகைய இன்னல்களை எதிர்கொள்கிறார் என்பதையும், உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதலாலித்துவத்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதையும் சிறு சினிமாத்தனத்தோடு சொல்லியிருந்தாலும், அதை மிக சிறப்பாகவே செய்திருக்கிறது.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி புதியவர் என்றாலும், தனது நடிப்பின் மூலம் உண்மை சம்பவத்தின் வலியை தனது நடிப்பின் மூலம் நேர்த்தியாக பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார்.

 

ஜெகன் பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அதிதி பாலனின் வருகை படத்திற்கு கூடுதல் பலம். நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், உப்பளத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை பிரதிபலித்திருக்கிறார். மேலும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மண்ணின் மைந்தர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.

 

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உப்பளம் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது வலியையும், அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒரு எளிய விஞ்ஞானியின் போராட்டத்தையும் திரைப்பட மொழியில் சிறப்பாக சொல்வதற்கு இயக்குநர் எம்.உதய்குமாருக்கு உறுதுணையாக பயணித்திருக்கிறார்கள். 

 

ஒரு குறிப்பிட்ட மனிதரின் போராட்டத்தை எதார்த்தமாக சொல்வதோடு, அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான திரை மொழியில் சொல்வதற்காக சில கமர்ஷியல் விசயங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் எம்.உதய்குமார், பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, வாழ்க்கையில் இத்தகைய போராட்டங்களுடன் பயணிக்கும் இளைஞர்களுக்கு, முயற்சித்தால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

 

"லைன்மேன்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : முயற்சித்தால் நிச்சயம் முடியும் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA