சற்று முன்
’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ விமர்சனம்
Directed by : Balaji Kesavan
Casting : Ashok Selvan, Avantika Mishra, oorvasi, Azhagam Perumal, M.S.Bhaskar, Bagavathi Perumal, Badava Gopi
Music :Nivas K Prasanna
Produced by : M.Thirumalai
PRO : AIM
Review :
"எமக்குத் தொழில் ரொமான்ஸ்" பாலாஜி கேசவன் இயக்கத்தில் எம்.திருமலை தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை நிவாஸ் கே.பிரசன்னா. இந்த படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதலர்களான அசோக் செல்வனும், அவந்திகா மிஸ்ராவும் சிறு பிரச்சனை மூலம் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்து சென்ற காதலியுடன் மீண்டும் ஒன்று சேர்வதற்கான முயற்சிகளில் அசோக் செல்வன் ஈடுபடும் போதெல்லாம் எதாவது ஒரு பிரச்சனை அவரை காதலியுடன் இணைய விடாமல் தடுத்து விடுகிறது. இப்படியே இவர்களது காதல் முறிவு முடிவில்லா பயணமாக நீண்டு கொண்டே போக, பிரச்சனைகளை முடித்து காதல் முறிவுக்கு நாயகன் அசோக் செல்வன் முற்றுப்புள்ளி வைத்தாரா? இல்லையா? என்பதை ரொமாண்டிக்காக அல்லாமல் நகைச்சுவையாக சொல்லவது தான் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.
வழக்கமான தனது துள்ளல் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கும் நாயகன் அசோக் செல்வன், காதல் காட்சிகளில் மட்டும் இன்றி காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நாயகனுக்கு இணையான வேடமாக இருந்தாலும், வழக்கமான கமர்ஷியல் நாயகியாக வலம் வந்திருக்கும் அவந்திகா மிஸ்ரா, காதல், கவர்ச்சி மற்றும் காமெடி ஆகியவற்றில் அசத்துகிறார்.
அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், மாமாவாக நடித்திருக்கும் படவா கோபி, டாக்டராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் வழக்கம் போல் நடித்திருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு மட்டும் இன்றி இளையராஜாவின் இசை மூலம் காமெடி காட்சிகளில் சிரிக்கவும் வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, பாடல் காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது.
பழைய பாணியிலான காதல் கதை தான் என்றாலும் அதை எந்தவித நெருடலும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி கேசவன்.
தலைப்பில் இருக்கும் ரொமான்ஸை காட்டிலும் காமெடிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பாலாஜி கேசவன் சில இடங்களில் தடுமாறியிருப்பது தெரிந்தாலும், அதை சமாளித்து ரசிகர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
"எமக்குத் தொழில் ரொமான்ஸ்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : கலகலப்பான பொழுதுபோக்கு படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA