சற்று முன்

'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |    பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!   |    'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!   |    திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |   

croppedImg_1486210112.jpeg

’ஜாலியோ ஜிம்கானா’ விமர்சனம்

Directed by : Sakthi Chidambaram

Casting : Prabhu Deva, Abhirami, Yogi Babu, Redin Kingsley, Madonna Sebastian, Yaashika Aanand, John Vijay Robo Shankar, Madhusudhan Rao, Sai Dheena, Abhirami Bhargavan, Sakthi Chidambaram, Jeagan Kaviraj

Music :Ashwin Vinayagamoorthy

Produced by : Trans India Media - Punitha Rajan and Rajendra M.Rajan

PRO : DOne

Review :

"ஜாலியோ ஜிம்கானா" சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ட்ரான்ஸ் இந்தியா மீடியா – புனிதா ராஜன், ராஜேந்திர எம்.ராஜன்தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஅஷ்வின் விநாயகமூர்த்தி. இந்த படத்தில் பிரபு தேவா, அபிராமி, மடோனா செபாஸ்டின், மதுசூதன ராவ், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், சாய் தினா, ரோபோ சங்கர், கல்லூரி வினோத், சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட மூன்று இளம் பெண்களின் அம்மாவான அபிராமியின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ மதுசூதனன் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பொதுநல வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க தனது மூன்று பெண்களுடன் அபிராமி செல்கிறார். பிரபு தேவா தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் கதவு திறந்திருக்க, அபிராமி மற்றும் அவர்களது பெண்கள் உள்ளே சென்று பார்க்கும் போது பிரபு தேவா பிணமாக இருக்கிறார்.

 

உடலில் எந்தவித காயங்களும் இல்லாத நிலையில் பிணமாக இருக்கும் பிரபு தேவாவை கடைசியாக பார்த்தவர்கள் என்பதால் கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடும் என்பதால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதற்குள் பிரபு தேவாவின் வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருக்கும் தகவல் நான்கு பெண்களுக்கு தெரிய வருகிறது. தங்களது பிரச்சனைகளை சமாளிக்க இந்த பணம் உதவியாக இருக்கும் என்பதால் பிணமாக இருக்கும் பிரபு தேவாவை உயிருடன் இருப்பது போல் காண்பித்து அந்த 10 கோடி ரூபாயை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களால் அது முடிந்ததா?, பிரபு தேவாவின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘ஜாலியோ ஜிம்கானா’.

 

ஆட்டம், பாட்டம் என்று கலகலப்பான கதாபாத்திரங்களில் அசத்தும் பிரபு தேவா, படம் முழுவதும் பிணமாக நடித்திருப்பது ஆச்சரியமானதாக இருந்தாலும், அதை மிக அழகாக செய்திருக்கிறார். பிணமாக நடித்தாலும் தனக்கே உரித்தான சில மேனரிசங்களை சில இடங்களில் வெளிக்காட்டி நடிப்பில் அசத்துபவர், அவ்வபோது பாடல் காட்சிகளில் ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தவும் செய்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் உயிரற்ற நிலையில் அவர் போடும் பொம்மலாட்ட சண்டைக்காட்சி அசத்தல்.

 

மடோனா செபாஸ்டியன், அபிராமி ஆகியோருடன் மேலும் மூன்று பெண்கள் படம் முழுவதும் பயணித்தாலும், பெரிய முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் முதல் முறையாக காமெடி செய்ய முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. அபிராமியும் அவருடன் இணைந்து நம்மை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார். ஆனால், பார்வையாளர்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், அபிராமி...அபிராமி....என்று அவரை ரசிக்க தவறவில்லை.

 

யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ், சாய் தினா, ரோபோ சங்கர், கதிர், ஜான் விஜய், கல்லூரி வினோத், ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ் ஆகியோர் போதாது என்று இயக்குநர் சக்தி சிதம்பரமும், படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ஜெகன் கவிராஜும் முக்கிய வேடங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருக்கிறார்.  

 

பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும்  “போலீஸ்காரனை கட்டிக்கிட்டா...” என்ற மிகப்பெரிய ஹிட் பாடலை கொடுத்திருக்கும் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், சாதி சங்க தலைவராக நடித்து செய்திருக்கும் அலப்பறைகள் மூலம் இனி நடிகராகவும் கவனம் ஈர்ப்பது உறுதி.

 

அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் பாபு காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் சக்தி சிதம்பரம், அதர பழசான கதையோடு மீண்டும் பயணித்திருந்தாலும், தனது பலமான காமெடிக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை ரசிக்க வைக்கிறார்.

 

நாயகனை படம் முழுவதும் பிணமாக நடிக்க வைப்பது மிகப்பெரிய சவால் என்றாலும், அதை மிகச்சரியாக செய்திருக்கும் இயக்குநர் சக்தி சிதம்பரம், பல தடுமாற்றங்களுடனும், சில குறைகளோடும் படத்தை இயக்கியிருந்தாலும், குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான பொழுதுபோக்கு படத்திற்கான அனைத்து அம்சங்களையும் அளவாகவும், நேர்மையாகவும் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

 

"ஜாலியோ ஜிம்கானா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA