சற்று முன்

'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |    பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!   |    'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!   |    திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |   

croppedImg_1514762231.jpeg

’முஃபாசா : தி லயன் கிங்’ விமர்சனம்

Directed by : Barry Jenkins

Casting : Mufasa, Takka, Rafiki, Simon, Pumbaa

Music :Dave Metzger Nicholas Britell (score) and Lin-Manuel Miranda (songs)

Produced by : Walt Disney Pictures

PRO : DOne

Review :

 

 

"முஃபாசா : தி லயன் கிங்"  பெரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தேவ் மெட்ஸ்கெர், நிகோலஸ் பிரிடெல், லின் மானுவல் மிரண்டா. இந்த படத்தில் முஃபாசா, டாக்கா, ரஃபிக்கி, டிமோன், பும்பா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

வறட்சியான வனப்பகுதியில் வாழ்ந்து வரும் சிறுவயது முஃபாசா, தனது பெற்றோருடன் இயற்கை வளம் அதிகம் உள்ள மிலேலே என்ற வனப்பகுதிக்கு பயணிக்கும் போது, திடீரென்று ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, தாய் மற்றும் தந்தையை பிரிந்து விடுகிறார். புதிய இடத்தில் இருக்கும் சிங்க கூட்டத்தின் ராஜா முஃபாசாவை ஏற்க மறுக்க, அந்த ராஜாவின் மகனும், மனைவியும் முஃபாசாவை அரவணைக்கிறார்கள். அதன்படி, புதிய இடத்தில் வளரும் முஃபாசா மற்றும் அங்கிருக்கும் சிங்க கூட்டங்களுக்கு, கொலைவெறி சிங்க கூட்டத்தினால் ஆபத்து வருகிறது.  ராஜா மற்றும் வளர்ப்பு தாயின் உத்தரவுபடி, இளவரசன் டாக்காவுடன் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் முஃபாசா, தன் பெற்றோர்கள் சொன்ன மிலேலேவுக்கு செல்ல முடிவு செய்கிறார். 

 

அவரது மிலேலே பயணத்தின் சாகசங்களுடன், கொலைவெறி சிங்க கூட்டங்களை வீழ்த்தி மிலேலேவுக்கு அவர் எப்படி ராஜா ஆனார் என்பதுடன், சகோதரனாக இருந்த டாக்கா எதனால் முஃபாசாவின் எதிரியாக உருவெடுத்தான், என்பதையும் சொல்வது தான் ‘முஃபாசா : தி லயன் கிங்’.

 

குழந்தைகள் கொண்டாடும் சிங்க ராஜாவின் கதை என்றாலும், திரைக்கதையில் காதல் மற்றும் துரோகம் இரண்டையும் சேர்த்து பெரியவர்களுக்கான படமாகவும் கொடுத்திருக்கிறார்கள். 

 

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஆற்று வெள்ளம் முதல் இறுதிக் காட்சியில் நடைபெறும் சண்டை வரை கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் அசத்தல். உண்மையான சிங்கம் எது, கிராபிக்ஸ் சிங்கம் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.

 

தமிழ் பதிப்பின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர்கள் நாசர், அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் ஆகிய அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும், ரஃபிக்கி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் விடிவி கணேஷ் “இங்கே என்ன சொல்லுது...” என்ற தனது அடையாள வசனத்தை சரியான இடத்தில் பேசி கைதட்டல் பெற்றுவிடுகிறார்.

 

அர்ஜுன் தாஸின் கம்பீர குரலோடு வரும் முஃபாசாவின் வீரம் மற்றும் விவேகமும், அசோக் செல்வனின் மென்மையான குரலோடு வரும் டாக்காவின் காதல் மற்றும் துரோகமும், சிறுவர்களுக்கான படம் என்பதை மறக்கடித்து பெரியவர்களையும் ரசிக்க வைக்கிறது.

 

அதே சமயம், தி லயன் கிங் கதாபாத்திரங்களில் சிறுவர்களை அதிகம் கவர்ந்த மற்றும் சிரிக்க வைக்கும் டிமோன் மற்றும் பும்பா கதாபாத்திரங்களின் திரை இருப்பு இதில் மிக குறைவாகவே இருக்கிறது. அதனால், திரையரங்குகளில் சிரிப்பு சத்தமும் மிக மிக குறைவாகவே கேட்கிறது.

 

"முஃபாசா : தி லயன் கிங்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA