சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

croppedImg_1995927885.jpeg

’ஐடென்டிட்டி’ விமர்சனம்

Directed by : Akhil Paul - Anas Khan

Casting : Tovino Thomas, Trisha, Vinay Rai, Aju Varghese, Mandira Bedi, Archana Kavi, Shammi Thilakan

Music :Jakes Bejoy

Produced by : Ragam Movies, Confident Group - Raju Malliath and Roy C. J.

PRO : Sathishkumar

Review :

"ஐடென்டிட்டி" அகில் பால் - அனஸ் கான் இயக்கத்தில் ராகம் மூவீஸ், கான்பிடென்ட் குரூப் - ராஜு மல்லியத் மற்றும் ராய் C. J. தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை ஜேக்ஸ் பிஜாய். இந்த படத்தில் திரிஷா, வினய் ராய், டோவினோ தாமஸ், அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், ஆர்ய, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

துணிக்கடையில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் செல்போனை மறைத்து வைத்து அதன் மூலம் அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பவரை, அவரது இடத்திற்கே சென்று எரித்து கொலை செய்கிறார் மர்ம நபர் ஒருவர். அந்த கொலையாளியை நேரில் பார்த்த சாட்சியான திரிஷா, மூலம் கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்கும் போலீஸ் அதிகாரி வினய், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து அவர்களை அப்படியே வரையும் அதீத திறன் படைத்த டோவினோ தாமஸின் உதவியை நாடுகிறார். அதன்படி, திரிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து டோவினோ தாமஸ் வரையும் உருவம் அவரைப் போலவே இருக்கிறது. 

 

கொலையாளி நான் தான் என்றால், என்னையே காட்டிவிட்டு போகலாமே பிறகு ஏன் இப்படி அடையாளம் சொல்ல வேண்டும்? என்ற டோவினோ தாமஸின் கேள்வி ஒரு பக்கம். மீண்டும் மீண்டும் ஒரே அடையாளத்தை எந்தவித தடுமாற்றமும், குழப்பமும் இல்லாமல் சொல்லும் திரிஷா, கொலை செய்யப்பட்டது யார்?, கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்? என்பதை விட கொலையாளியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் போலீஸ் அதிகாரி வினய், இவர்கள் மூன்று பேருக்கும் அந்த கொலைக்கும் என்ன சம்மந்தம்? என்பதை பரபரப்பான கிரைம் திரில்லர் ஜானரில் மட்டும் இன்றி ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் ஜானரிலும் சொல்வது தான் ‘ஐடென்டிட்டி’.

 

வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து தொடர்ந்து கவனம் ஈர்க்கும் நாயகன் டோவினோ தாமஸ், ஹரன் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் அதீத திறன் படைத்தவராக, ஸ்டைலிஷான லுக்கில் அழுத்தமாக நடித்திருக்கிறார். தனித்துவமான மேனரிசம் மூலம் பார்வையாளர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் கதாபாத்திரத்தின் மீது திருப்பும் டோவினோ தாமஸ், நடிப்பை தாண்டி, ஆக்‌ஷன் மற்றும் ஸ்டைலிஷ் என இரண்டிலும் அமர்க்களப்படுத்துகிறார்.

 

காதல், டூயட் பாடல் உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத நாயகியாக திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கும் திரிஷாவின் குழப்பமான மனநிலை மற்றும் விபத்தில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் வினய், அடுத்தடுத்த காட்சிகளில் எடுக்கும் அவதாரங்கள் எதிர்பாராத திருப்பங்களாக இருப்பதோடு, திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறது.

 

அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், ஆர்ய, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதையின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜின் கேமரா கிரைம் திரில்லர் ஜானர் படத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, விமானத்தில் நடைபெறும் சண்டைக்காட்சி, கார் சேசிங் உள்ளிட்டவைகளை பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு மற்றும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருப்பதோடு, பல இடங்களில் காட்சிகளுக்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறது.

 

கிரைம் திரில்லர் ஜானரில் தொடங்கும் கதை இரண்டாம் பாதியில் வேறு ஒரு ஜானரில் பல கிளைக்கதைகளோடும், பல்வேறு காதாபாத்திரங்களோடும் பயணித்தாலும், அனைத்தையும் நேர்த்தியாக தொகுத்து பார்வையாளர்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.

 

ஒரு கொலை, அதை செய்வதர் யார்? என்பதை கதையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு, அதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சிகளையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும்படி வடிவமைத்திருக்கும் இயக்குநர்கள் அகில் பால் - அனஸ் கான், பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எதாவது ஒரு திருப்பத்தின் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்கள்.

 

கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ், கொலையாளியை பார்த்தவர், கொலை செய்தவர், இவர்களை தாண்டிய ஒரு குற்றவாளி என அனைவரையும் ஒரே இடத்தில் பயணிக்க வைத்ததோடு, ஒன்றாக பயணிக்க வைத்து அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் மூலம் பார்வையாளர்களை பதற்றமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும் இயக்குநர்கள், இரண்டாம் பாதியில் கிரைம் திரில்லர் ஜானரையும் தாண்டி, ஏர் மார்சல், இந்திய பாதுகாப்பு படை, விமான போக்குவரத்து முறை, சாட்சி பாதுகாப்பு திட்டம் மற்றும் அதற்கான ஒரு அதிகாரி, அதை வைத்து நடத்தப்படும் அடையாளம் தொடர்பான மோசடி, என பல புதிய விசயங்கள் மூலம் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்.

 

முதல் பாதியில் கிரைம் திரில்லராக பயணிக்கும் படம் இரண்டாம் பாதியில் ஸ்டைலிஷ் கமர்ஷியல் ஆக்‌ஷன் ஜானரில் பயணிக்கும் போது இயக்குநர்கள் எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் இஷ்ட்டத்திறிற்கு விளையாடுவதும், இறுதியில் விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சியின் நீளமும் படத்தின் குறையாக இருந்தாலும், ஒட்டு மொத்த படமாக பார்க்கும் போது அந்த குறைகள் படத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

 

"ஐடென்டிட்டி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் ஜானர்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA