சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

croppedImg_1800401360.jpeg

’நிறம் மாறும் உலகில்’ விமர்சனம்

Directed by : Britto JB

Casting : Bharathiraja, Natty, Rio Raj, Sandy, Yogi Babu, Vadivukarasi, Aadhira, Thulasi, Khanika, Lovlyn, Rishikanth, Agen, Vigneshkanth, Kavya Arivumani, Suresh Menon, Suresh Chakravarthy, Aadukalam Naren

Music :Dev Prakash Regan

Produced by : Signature Productionsz & GS Cinema International - L Catherine Shoba & Lenin

PRO : Yuvaraj

Review :

 

 

"நிறம் மாறும் உலகில்" பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்நேச்சர் நேச்சர் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் GS சினிமா இன்டர்நேஷனல் - L கேத்தரின் ஷோபா  மற்றும் லெனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தேவ் பிரகாஷ் ரீகனின். இந்த படத்தில் நட்டி,  ரியோ ராஜ், பாரதிராஜா - வடிவுக்கரசி, சாண்டி, துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் யோகி பாபுவை சந்திக்கிறார். லவ்லினின் நிலையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, அம்மா என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’அம்மா’ என்ற உறவு மட்டுமே. 

 

அம்மா பாசத்திற்காக ஏங்கும் தாதா, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும் மகனின் சோகம், அம்மா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், என்று நான்கு விதமான கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் அம்மா மீதான பாசப் போராட்டம் தான் ‘நிறம் மாறும் உலகில்’.

 

நான்கு கதைகளின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி,  ரியோ ராஜ், பாரதிராஜா - வடிவுக்கரசி, சாண்டி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு நேர்த்தி.

 

இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் ஓகே ரகம் தான்.

 

படத்தொகுப்பாளர் தமிழ் அரசன் இயக்குநர் காட்சிப்படுத்திய நான்கு கதைகளையும் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொடுத்திருக்கிறாரே தவிர தனித்துவமாக எதையும் செய்யவில்லை.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரிட்டோ ஜே.பி, நான்கு கதைகளையும் அம்மா செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை பிழிந்திருபதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும், ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு பிளாஷ்பேக் என்று படம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

 

"நிறம் மாறும் உலகில்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : சுமாரான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA