சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

croppedImg_2108077568.jpeg

’படவா’ விமர்சனம்

Directed by : K.V.Nandha

Casting : Vimal, Soori,Shrita Rao,KGF Ram, Devadarshini, Namo Narayanan

Music :John Peter

Produced by : J Studio International - M.John Peter

PRO : Nikil Murugan

Review :

"படவா" கே.வி.நந்தா இயக்கத்தில் J ஸ்டுடியோ இன்டர்நேஷனல் - M. ஜான்  பீட்டர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜான் பீட்டர். இந்த படத்தில் விமல், சூரிஷ்ரிதா ராவ், தேவதர்ஷினி, நமோ நாராயணன், கே.ஜி.எப் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை  கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார். விமலை கண்டால் பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்பதோடு, அவரை ஊர் தலைவராகவும் தெர்ந்தெடுக்கிறார்கள்.

 

கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன?, மக்களின் மாற்றம் விமலின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?, என்பதை விமலின் வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் சொல்வது தான் ‘படவா’.

 

வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது, பிறகு வில்லனை எதிர்ப்பது, என்று ஒரு நடிகராக விமல் தொடர்ந்து செய்து வரும் வேலையை தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். அவரது அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது.

 

விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுவதும் வருகிறார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களை சிரிக்க வைக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ், வேலை இல்லாத நாயகி வேடத்தில் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

 

ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ரசிக்கும்படியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா வழக்கமான மற்றும் அதர பழசான கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கமர்ஷியலாகவும் இயக்கியிருந்தாலும், தேவையில்லாத சில காட்சிகள் மூலம் படத்தின் நீளத்தை அதிகரித்து சில இடங்களில் படத்தை தொய்வடைய செய்கிறார்.

 

விமல், சூரி ஆகியோரது அலப்பறைகள் மூலம் படத்தை ஜாலியாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் கே.வி.நந்தா, விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேலம் மரங்களை சிலர் தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதை பற்றி மேலோட்டமாக பேசியிருந்தாலும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.

 

"படவா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : சுமாரான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA