சற்று முன்

விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!   |    EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |    யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் அசத்தலான போஸ்டர் வெளியானது!   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்!   |    'ஸ்வீட் ஹார்ட்' படத்தை பார்த்து ரியோ ராஜை கண்கலங்க பாராட்டிய ரசிகை!   |    சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் கௌரவம்! - நடிகர் எஸ். ஜே. சூர்யா   |    ZEE5 இல் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' புதிய சாதனை!   |    இணையம் முழுக்க வைரலாகி வரும் 'எம்புரான்' பட டிரெய்லர் - வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!   |    சோசியல் மீடியா ஒரு கூர்மையான கத்தி - தலைவர் கவிஞர் விவேகா பேச்சு   |    மும்பையில் 'எம்புரான்' பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!   |    'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படம் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |   

croppedImg_1049987466.jpeg

’ராபர்’ விமர்சனம்

Directed by : SM Pandi

Casting : Sathya, Daniel Annie Pope, Jayaprakash, Deepa Shankar, Sendrayan, Pandiyan

Music :Johan Shevanesh

Produced by : Impress Films Productions & Metro Productions - Kavitha S & Ananda Krishnan

PRO : Thirai Nidhi Selvam

Review :

"ராபர்" எஸ்.எம்.பாண்டி இயக்கத்தில் இம்ப்ரெஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் - கவிதா S & ஆனந்த கிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜோகன் செவனேஷ். இந்த படத்தில் சத்யா, டேனியல் அன்னி போப், செண்ட்ராயன், ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கும் நாயகன் சத்யாவுக்கு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவர், கொலை செய்யவும் துணிகிறார். இதனால், தொழில் ரீதியான எதிரிகள் அவரை துரத்த,  மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்க அவரை விரட்டுகிறார்கள். இவர்களிடம் இருந்து நாயகன் சத்யா தப்பித்து தனது குற்ற செயல்களை தொடர்ந்தாரா? இல்லையா ? என்பது தான் ‘ராபர்’ கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் சத்யாவுக்கு இந்த வேடம் புதிதல்ல என்பதால் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அப்பாவித்தனமான முகத்தோடும், அளவான பேச்சோடும் பயணித்திருப்பவர், குற்ற செயல்களில் ஈடுபடும் போது படம் பார்ப்பவர்களையும் பதற வைத்துவிடுகிறார்.

 

வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் டேனியல் போப், மிரட்டவில்லை என்றாலும் சொதப்பாமல் நடித்திருக்கிறார். 

 

சிறையில் கெத்தாக எண்ட்ரிக் கொடுத்து இறுதியில் வெத்தாக முடியும் செண்ட்ராயனின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.

 

ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், இசையமைப்பாளர் ஜோகன் செவனேஷ், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி ஆகியோரது பணிகள் நேர்த்தி.

 

’மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணனின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, ‘மெட்ரோ’ படத்தின் சில சம்பவங்களை போலவே இதிலும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருப்பதால் படம் திரையிலும் சரி, பார்வையாளர்களிடமும் சரி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வரும் நபர்களிடம் வழிப்பறி மற்றும் செயின் பறிப்புகளில் ஈடுபடுவது சரி, ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அப்படிப்பட்ட இடங்களில் மட்டுமே நடப்பது போல் காட்டியிருக்கும் இயக்குநர் எஸ்.எம்.பாண்டி, ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் சில காட்சிகளை வைத்துக் கொண்டு அதே பாணியில், ஒரு படத்தை கொடுத்திருக்கிறாரே தவிர புதிதாக வேறு எதையும் சொல்லவில்லை.

 

"ராபர்" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

Verdict : கதை ஈர்க்கவில்லை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA