சற்று முன்

பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!   |    EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |    யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் அசத்தலான போஸ்டர் வெளியானது!   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்!   |    'ஸ்வீட் ஹார்ட்' படத்தை பார்த்து ரியோ ராஜை கண்கலங்க பாராட்டிய ரசிகை!   |    சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் கௌரவம்! - நடிகர் எஸ். ஜே. சூர்யா   |    ZEE5 இல் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' புதிய சாதனை!   |    இணையம் முழுக்க வைரலாகி வரும் 'எம்புரான்' பட டிரெய்லர் - வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!   |    சோசியல் மீடியா ஒரு கூர்மையான கத்தி - தலைவர் கவிஞர் விவேகா பேச்சு   |    மும்பையில் 'எம்புரான்' பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!   |    'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படம் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |    இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கி நடிக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்'   |    யுவன் சங்கர் ராஜா வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படக்குழுவினருக்கு வாழ்த்து!   |    மார்ச் 27ல் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'லூசிபர்' பட இரண்டாம் பாகமான 'எம்புரான்'!   |   

croppedImg_1350054315.jpeg

’பெருசு’ விமர்சனம்

Directed by : Elango Ram

Casting : Vaibhav, Sunil, Niharika, Chandini, Kaarthekeyen, Bala Saravanan, Munishkanth, Redin Kingsley,VTV Ganesh, Karunakaran, Swaminathan, Dhanam, Deepa, Gajaraj, Alexis, Subatra Robert, Jeeva Balachandran

Music :Arun Raj

Produced by : Stone Bench Films,Harman Baweja, Emberlight Studios - Kaarthekeyen S

PRO : DOne

Review :

"பெருசு" இளங்கோ ராம் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்,ஹர்மான்  பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் - கார்த்திகேயன் S தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அருண் ராஜ். இந்த படத்தில் சுனில், வைபவ், சாந்தினி, நிஹாரிகா, பாலசரவணன், முனீஷ்காந்த், ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

ஊரில் மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு என்பவரின் மகன்கள் சுனில் மற்றும் வைபவ். ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து டிவி பார்க்கும் பெருசு திடீரென்று இறந்து விடுகிறார். ஆனால், அவரது உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் திணறும் குடும்பத்தார், எப்படி பிரச்சனையை சமாளித்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதே ’பெருசு’.

 

எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கும் வைபவ், இயல்பான காமெடி மூலம் தனது கதாபாத்திரத்தை கையாண்டிருந்தாலும், சில இடங்களில் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்.

 

வீட்டின் மூத்த பிள்ளை கதாபாத்திரத்திரல், பல பொறுப்புகளை கவனிக்கும் சுனில், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், வைபவின் மனைவியாக நடித்திருக்கும் நிஹாரிகா, மேடை நாடக கலைஞர் போல் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்.

 

பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோரது கூட்டணி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் வரும் காட்சிகள் வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்கும்படி பார்வையாளர்களுக்கு அழுத்தும் கொடுக்கிறது.

 

தனம், தீபா, கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் தலைகாட்டிச் செல்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் அருண் ராஜின் இசை பாடல்களில் சோபிக்கவில்லை என்றாலும், பின்னணி இசை மூலம் நகைச்சுவை உணர்வை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

 

ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், தனது வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை உயிரோட்டத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.

 

பாலாஜியின் வசனங்கள் கிரேஸி மோகனை நினைவுப்படுத்தினாலும், சில இடங்களில் சிரிப்பே வராத வசனங்களை நகைச்சுவை என்று திணிக்கவும் செய்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் இளங்கோ ராம், முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை எந்த ஒரு நெருடல் நெருட இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கடி என்ற ரீதியில் படம் பயணித்தாலும், பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது.

 

"பெருசு" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : காமெடி கலாட்டா

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA