சற்று முன்

16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!   |    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!   |    ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!   |    2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |   

croppedImg_52857744.jpeg

’மாமன்’ விமர்சனம்

Directed by : Prasanth Pandiyaraj

Casting : Soori, Aishwarya Lakshmi, Rajkiran, Swasika, Master Prageeth Sivan, Bala Saravanan, Jayaprakash, Geetha Kailasam, Viji Chandrasekar, Baba Baskar, Chaya Devi, Nikila Shankar

Music :Hesham Abdul Wahab

Produced by : Lark Studios - K Kumar

PRO : Yuvaraj

Review :

"மாமன்" பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் லார்க் ஸ்டுடியோஸ் - கே  குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஹேசம் அப்துல் வாகப். இந்த படத்தில் சூரி, சுவாஷிகா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நாயகன் சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அன்பாக இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு அவரது அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது. தனது அக்கா மீது காட்டும் அன்பவை விட அக்கா மகன் மீது அதிகம் அன்பு காட்டுகிறார். அக்கா மகனும் பெற்றோரை விட சூரியுடன் தான் அன்பாக இருக்கிறார்.  நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூரியின் இல்லற வாழ்வில், அக்கா மகனால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சூரி குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதை கண் கலங்கும்படி சொல்வதே ‘மாமன்’.

 

எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நாயகனாக தன்னால் உருவெடுக்க முடியும், என்பதை தனது நடிப்பு மூலம் மீண்டும் ஒருமுறை சூரி நிரூபித்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரம், ஆக்‌ஷன் ஹீரோ என்று தனது ஆரம்பக்கட்ட படங்களில் அடையாளப்படுத்திக் கொண்ட சூரி, இதில் கமர்ஷியல் நாயகனாக கலகலப்பாக வலம் வருவதோடு, செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தமான நடிப்பின் மூலம் இதயத்தை கனக்க வைக்கிறார். அக்கா மற்றும் குடும்பம் மீது காட்டும் அன்பும், அக்கறையும் போல் மனைவியிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் சூரிக்கு, இனி பெண்கள் ரசிகர் வட்டம் அதிகரிப்பது உறுதி.

 

சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, மனைவிகளின் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது  நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்பம் மீது அக்கறை காட்டும் ஆண்கள், மனைவி மீது காட்டவில்லை என்ற பெரும்பாலான பெண்களின் கோபத்தை தனது ஆக்ரோஷமான நடிப்பு மூலம் வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.  

 

மனைவியின் பெருமை பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரணின் கதாபாத்திரமும், அவரது திரை இருப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார் சுவாஷிகா.  சூரியின் அக்காவாக நடித்திருக்கும் அவர் கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகிறார்.

 

பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள். 

 

இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் அளவாக பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறது.

 

கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு நேர்த்தியாக இருந்தாலும், படம் முழுவதும் திருமண நிகழ்ச்சியாகவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

 

நாயகன் சூரியின் கதையில் குடும்ப உறவுகளின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் வழிந்தோடுகிறது.

 

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லி, குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருக்கிறார்.

 

திருமண நிகழ்ச்சி, காது குத்து, சீமந்தம் என்று படம் முழுவதும் குடும்ப நிகழ்ச்சி அதிகம் இருப்பதால், ஏதோ சீரியல் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், பெண் பெருமையை தூக்கலாக பேசியிருப்பதால் படம் நிச்சயம் தாய்மார்களை கவரும்.

 

"மாமன்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : பெண்களை கவரும்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA