சற்று முன்

இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |    பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி   |    'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!   |    'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!   |    JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!   |    'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்   |    யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    '#சூர்யா 46' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!   |    விஜய் ஆண்டனியுடன் 'லாயர்' படத்துக்காக இணையப்போகும் புகழ் பெற்ற ஒரு நடிகை!   |    சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' பட இசை வெளியீட்டு விழா!   |    16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!   |    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!   |    ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!   |    2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |   

croppedImg_480533218.jpeg

‘ஸ்கூல்’ விமர்சனம்

Directed by : R.K.Vidyadharan

Casting : Yogi Babu, Bhoomika Chawla, KS Ravikumar, Bagavathi Perumal, Chams, Nizhalgal Ravi, KR Vidhyaadharan

Music :Ilayaraja

Produced by : Quantum Film Factory - R.K.Vidyadharan

PRO : Bhuvan

Review :

"ஸ்கூல்" கே.ஆர்.வித்யாதரன் இயக்கத்தில் குவாண்டம் ஃபிலிம் பேக்டரி – கே.ஆர்.வித்யாதரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை இளையராஜா. இந்த படத்தில் யோகி பாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், நிழல்கள் ரவி, சாம்ஸ், கே.ஆர்.வித்யாதரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

இரண்டாம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால், இந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளவதோடு, சாதி, மத பிரிவினையோடு வெற்றி மட்டுமே வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 

 

இதற்கிடையே, அந்த புத்தகத்தை மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத உருவம் என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் அதை ஏற்க மறுப்பதோடு, அதன் பின்னணியை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார். ஆனால், அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

இதற்கிடையே, பள்ளியில் இருக்கும் அமானுஷய சக்திகள் குறித்து சாமியார் ஆர்.கே.வித்யாதரன் கண்டுபிடிப்பதோடு, அந்த அமானுஷயங்களை வரவைத்து எதற்காக இப்படி செய்கிறார்கள், என்று கேட்க முயற்சிக்கிறார். இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான யோகி பாபு மற்றும் பூமிகா சாவ்லா, அந்த பள்ளிக்கு மீண்டும் வர, அவர்களை பார்த்ததும் அந்த அமானுஷ்ய சக்திகள் அமைதியாகிறது.

 

அவர்கள் யார்? அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்பதை, வெற்றி, தோல்வியை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, என்ற அறிவுரையை மாணவர்களுக்கு கூறும் விதமாக சொல்வதே ‘ஸ்கூல்’.

 

ஆசிரியர் கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, காமெடியை அளவாக கையாண்டிருந்தாலும், குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்த்திருக்கிறார்.

 

பூமிகா சாவ்லாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், வெற்றி மற்றும் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையை அழுத்தமாக பதிவு செய்வதற்கு அவர் துணையாக நின்றிருக்கிறார்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி மஸ்தான் வேடத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, உலகநாத சுவாமியாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன், ஆசிரியைகள் வேடத்தில் நடித்திருக்கும் இரண்டு நடிகைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வேடத்தில் நடித்திருப்பவர்கள் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இளையராஜாவின் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கம் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை அளவு.

 

ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜ், பள்ளி வளாகத்திலேயே முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தாலும், வகுப்பறை காட்சிகளை படமாக்காமல் விட்டிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் ராகவ் அர்ஸ், காட்சிகளின் நீளதை குறைத்திருக்கலாம். 

 

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே வித்யாதரன், அறிவு போதிக்கும் பள்ளியில் அமானுஷ்யம் என்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் கதையை சொல்லியிருந்தாலும், பின்னணியில் மாணவர்களுக்கு சிறப்பான அறிவுரை வழங்கியிருக்கிறார்.

 

வெற்றி, தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பயணிக்காமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொண்டு பயணித்தால், படிக்கவில்லை என்றாலும் சாதிக்க முடியும், என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்திருக்கிறார்.

 

படத்தின் நீளம் மற்றும் அதிகம் பேசுவது படத்தின் குறையாக இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான வசனங்கள் பாராட்டும்படி இருக்கிறது.

 

"ஸ்கூல்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : மாணவர்களுக்கு சிறப்பான அறிவுரை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA