சற்று முன்

இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |    பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி   |    'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!   |    'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!   |    JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!   |    'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்   |    யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    '#சூர்யா 46' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!   |    விஜய் ஆண்டனியுடன் 'லாயர்' படத்துக்காக இணையப்போகும் புகழ் பெற்ற ஒரு நடிகை!   |    சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' பட இசை வெளியீட்டு விழா!   |    16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!   |    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!   |    ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!   |    2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |   

croppedImg_1180869036.jpeg

‘ஏஸ்’ விமர்சனம்

Directed by : Arumugakumar

Casting : Vijay Sethupathi, Rukmani Vasanth, Yogi Babu, Divya Pillai, Bablu Prithviraj, BS Avinash, Rajkumar

Music :Justin Prabhakar - BACKGROUND SCORE & SONGS: Sam CS

Produced by : 7Cs Entertainment - Arumugakumar

PRO : Yuvaraj

Review :

"ஏஸ்" ஆறுமுககுமார் இயக்கத்தில் 7CS எண்டர்டெயின்மெண்ட் – ஆறுமுககுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகர் – சாம்.சி.எஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார். யோகி பாபு வீட்டில் தங்குபவர், அவர் மூலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் ருக்மணி வசந்துடன் நட்பு ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறுகிறது. 

 

இதற்கிடையே ருக்மணிக்கு பணம் தேவை ஏற்படுகிறது. அதனால் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார். ஒரு வாரத்தில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் சூழ்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார். அவரது திட்டம் ஜெயித்ததா?, அதன் மூலம் அவர் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார், அதில் இருந்து எப்படி மீள்கிறார்?, என்பதை கமர்ஷியலமாகவும், மாஸாகவும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ஏஸ்’.

 

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி கையாண்டிருக்கிறார். கூடுதலாக இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் வலம் வருபவர், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் அசத்துகிறார். 

 

யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. படம் முழுவதும் வரும் யோகி பாபு, வரும் காட்சிகள் ஒருசிலது சோடை போனாலும், பெரும்பாலான காட்சிகளில் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். 

 

திவ்யா பிள்ளை, வில்லன்களாக நடித்திருக்கும் பப்ளு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், இதுவரை திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியா லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார். காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பில் ஆரம்பத்தில் படம் வேகமாக பயணித்தாலும், இரண்டாம் பாதி முழுவதும் இழுவையாக இருக்கிறது. காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஆறுமுககுமார், விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக ஒரு படம் எடுத்திருக்கிறாரே தவிர, அவருக்கான படமாக எடுக்கவில்லை. 

 

வங்கி கொள்ளை கதைகள் பல நாம் பார்த்திருந்தாலும், அவற்றில் இருந்து எந்தவிதத்திலும் இந்த படம் தணித்து நிற்கவில்லை. தொழில்நுட்பம் நிறைந்த காலக்கட்டத்தில் தணி ஒருவராக விஜய் சேதுபதி வங்கியை கொள்ளையடிப்பது, காதில் வாழைப்பூ வைப்பது போல் இருக்கிறது. அதிலும், வங்கியை கொள்ளையடித்தப் பிறகு, லாட்டரியில் விழும் பணம், அதன் மூலம் பிரச்சனைகள் என்று கதையை நகர்த்துவதற்கு எதை எதையோ காட்சிப்படுத்தி படத்தை மிக நீளமாக நீட்டி, இயக்குநர் ஆறுமுககுமார் பார்வையாளர்களை சோதித்திருக்கிறார்.

 

"ஏஸ்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA