சற்று முன்

இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |    பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி   |    'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!   |    'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!   |    JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!   |    'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்   |    யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    '#சூர்யா 46' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!   |    விஜய் ஆண்டனியுடன் 'லாயர்' படத்துக்காக இணையப்போகும் புகழ் பெற்ற ஒரு நடிகை!   |    சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' பட இசை வெளியீட்டு விழா!   |    16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!   |    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!   |    ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!   |    2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |   

croppedImg_469729855.jpeg

’ஆகக் கடவன’ விமர்சனம்

Directed by : Dharma

Casting : Aathiran Suresh, Vincent S, CR Rahul, Michael S, Sathish Ramadass, Dashna, Rajasivan, Vijay Srinivas

Music :Santhan Anebajagane

Produced by : Sarah Kalaikkoodam - Anitha Leo, Leo V Raja

PRO : Captain MP Anand

Review :

"ஆகக் கடவன" தர்மா இயக்கத்தில் சாரா கலைக்கூடம் - அனிதா லியோ, லியோ V ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாந்தன் அன்பழகன். இந்த படத்தில் ஆதிரன் சுரேஷ், தஷ்ணா, சி.ஆர்.ராகுல், வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ், ராஜசிவன்,  மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல்,  ராஜசிவன் மூவரும் ஒரு மருந்தகத்தில் வேலை செய்கிறார்கள். சொந்தமாக மருந்தகம் வைக்கும் முயற்சியில் இருக்கும் இவர்கள், அதற்காக ரூ.6 லட்சம் பணம் சேர்க்கிறார்கள். ஆனால், அந்த பணம் திருட்டு போய் விடுகிறது. இதனால், ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு செல்கிறார்கள். அப்போது வழியில் வாகனம் பஞ்சராகி விட, பொட்டல் காட்டுப் பகுதியில் இருக்கும் பஞ்சர் கடைக்கு பஞ்சர் போட செல்கிறார்கள்.

 

அந்த இடத்தில், கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் இருக்க, சிறுவன் ஒருவன் பஞ்சர் போடும் வேலை செய்கிறார். பஞ்சர் போட வந்தவர்களை, வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் அடிக்கடி முறைத்துக் கொண்டிருப்பதோடு, அந்த இடத்தில் ஏதோ மர்மமான சில விசயங்களை செய்து வருகிறார்கள். இதற்கிடையே, பஞ்சர் போடும் வேலை தாமதமாக ஒரு கட்டத்தில் ஆதிரன் மற்றும் ராகுலை சுற்றி மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. எதற்காக இது நடக்கிறது? என்று யோசிக்கும் போது, அங்கிருந்து ராகுல் மாயமாகி விடுகிறார். ராகுலை ஆதிரன் தேட, குற்ற பின்னணி கொண்ட கும்பல் ஆதிரனை தாக்க முயற்சிக்கிறது.

 

குற்றப் பின்னணி கொண்ட கும்பல் இவர்களை எதற்காக தாக்க வேண்டும்?, அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? அந்த இடத்தில் நடக்கும் மர்ம சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதை வார்த்தைகளுக்கு உள்ள வலிமையை உணர்த்தும் வகையில் சொல்வதே ‘ஆகக் கடவன’.

 

நல்லவர்கள் மூன்று பேர், கெட்டவர்கள் மூன்று பேர் என கதையின் முதன்மை  வேடத்தில் நடித்திருக்கும் 6 நபர்களை தவிர்த்து, சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

 

முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ஆதிரன், மிக இயல்பாக நடித்திருக்கிறார். எந்த இடத்தில் கோபமடைய வேண்டும், எந்த இடத்தில் அமைதியாக செல்ல வேண்டும், என்பதை புரிந்து செயல்படும் அவரது ஒவ்வொரு அசைவுகளும், சரியான மீட்டரில் பயணித்திருக்கிறது.

 

ஆதிரனுக்கு நேர் எதிர் வேடத்தில் நடித்திருக்கும் ராகுல், அவசரப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் விபரீதத்தில் முடிந்தாலும், கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

 

பட்டாணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ் ராமதாஸ், வெகுளித்தமான முகத்தை வைத்துக் கொண்டு, கோழி கூவுவதற்கும், நாய் சிறுநீர் கழிப்பதற்கும் சொல்லும் கதைகள் திரையரங்கில் சிரிப்பலையை நிச்சயம் எழுப்பும்.

 

வின்சென்ட் .எஸ் மற்றும் மைக்கேல்.எஸ் இருவருமே கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

பஞ்சர் கடை பையனாக நடித்திருக்கும் தஷ்ணா, ஆதிரனின் அப்பா, காவலர் வேடத்தில் நடித்திருப்பவர், என படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா, பொட்டல் காட்டையும், அமைதியான அந்த பஞ்சர் கடை இடத்தையும் பயமுறுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரங்களின் முகங்களில் இருக்கும் இறுக்கத்தின் பின்னணியில் ஏதோ பெரிய விசயம் இருக்கிறது, என்பதை தனது கேமரா மூலம் பார்வையாளர்களிடம் எளிதில் கடத்தி விடுகிறார்.

 

இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர்கள் சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ், சாலை பயணம் முதல், பஞ்சர் கடைக்குள் நடக்கும் சம்பவங்கள் வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க வைக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் தர்மா, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு என்பதை உணர்த்தும் வகையிலான கதைக்கருவை வைத்துக் கொண்டு, சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

 

கதைக்களம் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம், கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என புதியக்குழு என்ற உணர்வே ஏற்படாத வகையில், படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. குறிப்பாக பெண் கதாபாத்திரங்கள் இன்றி, ஆண்களை மட்டுமே வைத்துக் கொண்டு தான் சொல்ல வந்ததை இயக்குநர் தர்மா, மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

 

"ஆகக் கடவன" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA