சற்று முன்

புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |    பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி   |    'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!   |    'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!   |    JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!   |    'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்   |    யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    '#சூர்யா 46' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!   |    விஜய் ஆண்டனியுடன் 'லாயர்' படத்துக்காக இணையப்போகும் புகழ் பெற்ற ஒரு நடிகை!   |   

croppedImg_28875502.jpeg

‘ஜின்’ விமர்சனம்

Directed by : TR Bala

Casting : Mugen Rao, Bhaviya Trikha, Vadivukkarasi, Balasaravanan, Radha Ravi, Nizhgal Ravi, Vinothini, Rithivik

Music :Vivek Mervin

Produced by : TR Bala

PRO : Nikil Murugan

Review :

"ஜின்" டி.ஆர்.பாலா இயக்கத்தில் டி.ஆர்.பாலா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை விவேக் மெர்வின். இந்த படத்தில் முகேன் ராவ், பவ்யா ட்ரிகா, ராதாரவி, இமான் அண்ணாச்சி, வினோதினி, பாலசரவணன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மன்னர்களால் மந்திரவாதிகள் மூலம் உருவாக்கப்பட்ட தீய சக்தி தான் ஜின். இதில், நல்ல ஜின்களும் உண்டு. நல்ல ஜின்கள் மன்னர்களின் பாதுகாவலர்களாக இருப்பதோடு, மக்களுக்கு நல்லதும் செய்து வந்தன. இப்படிப்பட்ட ஜின்கள் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்பது தான் கதை.

 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஒருவரிடம் இருந்த நல்ல ஜின் ஒன்று நாயகன் முகேன் ராவ் வசம் வருகிறது. அது வந்த பிறகு, காதல், கல்யாணம், இசைக்குழு தொடக்கம் என்று அவரது வாழ்க்கையில் பல நல்ல விசயங்கள் நடக்கிறது. அதே சமயம், அவ்வபோது வீட்டில் இருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வர, அவரது மனைவியும் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதற்கெல்லாம் காரணம் ஜின் தான் என்று நினைத்து அதை வெளியே வீசி விடுகிறார். 

 

ஆனால், அந்த ஜின் முகேனை விடாமல் துரத்துவதோடு, மனைவி மீதான தாக்குதல் மற்றும் ஜின் பற்றிய ரகசியம் ஒன்று முகேனுக்கு தெரிய வருகிறது. அது என்ன?, அதற்கும் அவரது மனைவி தாக்கப்பட்டதற்கும் என்ன சம்மந்தம்?, என்பதை கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஃபேண்டஸி ஜானரில் சொல்வது தான் ‘ஜின்’.

 

நாயகனாக நடித்திருக்கும் முகேன் ராவ், நடிப்பதை விட சிரிப்பதை தான் அதிகம் செய்திருக்கிறார். காதல், கோபம், நகைச்சுவை என பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தும், அவற்றை செய்ய தெரியாமல் தடுமாறியிருப்பவர், அதனை சமாளிப்பதற்காக படம் முழுவதும் விதவிதமாக சிரித்து மழுப்புகிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, கொஞ்சம் காதல் காட்சி, சில பாடல் காட்சிகளில் தலை காட்டுவதோடு, கோமாவில் படுத்து விடுகிறார். பிறகு கிளைமாக்ஸில் தலைக்காட்டுவது என தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். 

 

வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, பொருந்தாத வேடத்தில் பார்வையாளர்களை கடுப்பேற்றும் வகையில் நடித்திருக்கிறார்.  பாலசரவணன் வரும் காட்சிகள் சில சிரிக்க வைப்பது ஆறுதல்.

 

வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, சிறுவன் ரித்விக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள். 

 

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில் ஆரம்பக் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.

 

இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்.

 

எழுதி இயக்கியிருக்கும் டி.ஆர்.பாலா, ஜெய்சங்கரின் ‘பட்டணத்தில் பூதம்’ முதல் பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ வரை நாம் பார்த்து பழகிய பூதத்தை ஜின் என்ற பெயரில், புதிய வடிவில் கொடுத்திருக்கிறார். 

 

ஜின்களின் தோன்றல் மற்றும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெட்டியில் அடைக்கப்பட்ட ஜின் முகேன் வசம் வருவதற்கான பின்னணி கதைகளை ஓவிய காட்சிகளாக சொல்லப்பட்டாலும், சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். அதேபோன்று, படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் படம் பார்வையாளர்களை கவர்ந்திருக்கும்.

 

இரண்டாம் பாதியில் ஜின் ராபிக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதை நகர்த்தப்படுவது சிறுவர்களை கவரும் முயற்சியாக இருந்தாலும், தரமற்ற கிராபிக்ஸ் கதாபாத்திரம் மற்றும் அதன் செயல்பாடுகள் கதையோடு ஒட்டாமல் பயணிப்பது படத்திற்கு பலவீனம்.

 

"2018" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : சுமார்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA