சற்று முன்

மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |   

croppedImg_1282310308.jpeg

’பரமசிவன் பாத்திமா’ விமர்சனம்

Directed by : Esakki Karvannan

Casting : Vimal Sayadevi, MS Baskar, Esakki Karvannan, M Sukumar, Cool Suresh, Mahendrian, Aadhira, Sriranjani, Majojkumar, Seshvitha, VR Vimalraj, Kadhal Sukumar, Aaru Bala, Veerasamar, Kalavani Kalai

Music :Deepan Chakravarthy

Produced by : Lakshmi Creations - Esakki Karvannan

PRO : Nikil Murugan

Review :

"பரமசிவன் பாத்திமா" இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் – இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தீபன் சக்கரவர்த்தி. இந்த படத்தில் விமல், சாயாதேவி, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், ஆறு பாலா, கூல் சுரேஷ், எம்.சுகுமார், மகேந்திரன், ஆதிரா, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் ஒன்று மதம் மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிந்து விடுகிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வபோது மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களை நாயகன் விமல் மற்றும் நாயகி சாயாதேவி இணைந்து கொலை செய்வதோடு, மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. மறுபக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது. விமலும், சாயாதேவியும் எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? என்பதை இந்து மதத்திற்கான பிரச்சாரமாக சொல்வதே ‘பரமசிவன் பாத்திமா’.

 

விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.

 

கிறிஸ்தவ தேவாலய பாதிரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் இருவரும் அதிகம் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் பேச்சு மூலம் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள், என்பது தான் பார்வையாளர்களுக்கு புரியவில்லை.

 

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ்,  மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் நடித்திருப்பதால், தனது கேமராவுக்கு பெரிய வேலை கொடுக்கவில்லை. சில பருந்து கோணங்கள், ஊர் மக்கள் சண்டைப்போடுவதற்காகவே இருக்கும் ஒரு தெரு, சில வனப்பகுதிகள் என்று குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கேமரா திரும்ப திரும்ப பயணிக்கிறது.

 

தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை.

 

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டே இருப்பதால் படத்தொகுப்பாளர் புவனால் எந்த காட்சியிலும் பெரிதாக கத்திரி போட முடியவில்லை என்பது காட்சிகளின் நீளத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் தான் உயர்ந்தது, மற்றவை பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கிறது என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட பலர் பெயர் அளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் பிரச்சார பாணியில் சொல்லியிருக்கிறார்.

 

இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், எந்த மதமாக இருந்தாலும், அனைவரும் ஒன்று என்ற சிந்தனையோடு மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களிடம் மத மோதல்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்.

 

"பரமசிவன் பாத்திமா" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

Verdict : மத மோதல்களை உருவாக்க முயற்சி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA