சற்று முன்

அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |   

croppedImg_59492185.jpeg

’பறந்து போ’ விமர்சனம்

Directed by : Ram

Casting : Shiva, Mithul Ryan, Grace Antony, Anjali, Balaji Sakthivel, Aju Varghese

Music :Songs: Santhosh Dhayanidhi - Score: Yuvan Shankar Raja

Produced by : Seven Seas and Seven Hills Productions, JioHotstar, GKS Bros Productions - Ram, V. Gunasekaran,V.Karupuchaamy, V. Shankar, Sajith Sivanandan, K. Madhavan

PRO : DOne

Review :

"பறந்து போ" ராம் இயக்கத்தில்  ஏழு கடல் ஏழு மலை புரொடக்‌ஷன்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜி.கே.எஸ் பிரோஸ் புரொடக்‌ஷன்ஸ் – ராம், வி.குணசேகரன், வி.கருப்புசாமி, வி.சங்கர், சஜித் சிவானந்தம், கே.மாதவன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சந்தோஷ் தயாநிதி – பின்னணி இசை : யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான், அஞ்சலி, பாலாஜி சக்திவேல், அஜு வர்கீஸ், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

தனக்கு கிடைக்காத அனைத்தும் தனது பிள்ளைக்கு கிடைக்க வேண்டும், தான் செல்லாத உயரத்திற்கு தன் பிள்ளை செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள், அந்த பிள்ளையின் ஆசை என்னவென்று அறிவதில்லை. அப்படி ஒரு தந்தையான மிர்ச்சி சிவா, அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி, தங்களது பிள்ளையை பெரிய பள்ளியில் படிக்க வைப்பது, அவர் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவர் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அவர் உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள். 

 

இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் நீண்ட தூரம் பயணிக்கும் மிர்ச்சி சிவா, தனது மகனின் உண்மையான விருப்பம் மற்றும் அவன் வாழ நினைக்கும் வாழ்க்கைப் பற்றி எப்படி தெரிந்துக் கொள்கிறார், என்பதை சிரித்து மகிழும்படி சொல்வதே ‘பறந்து போ’.

 

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பதே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்த நிலையில், படம் அதை விட மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது. அந்த அளவுக்கு இயக்குநர் ராம் படத்தை ஜாலியாக நகர்த்திச் செல்கிறார்.  பயணம் சார்ந்த மற்றும் உணர்வுப்பூர்வமான கதை இயக்குநர் ராமுக்கு புதிதல்ல என்றாலும், அதே பாணியிலான இந்த கதையை அவர் கையாண்ட விதம் புதியதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

 

கோகுல் என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா, எபோதும் போல் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பதோடு, தனது டைமிங் வசனங்கள் மூலம் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார். தனது வழக்கமான பாணியிலான வசன உச்சரிப்பு என்றாலும், அவரது உடல் மொழி மற்றும் சரியான இடத்தில் சொல்லி திரையரங்கையே சிரிப்பு சத்தத்தில் அதிர வைக்கிறார்.

 

சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான், வயதுக்கு ஏற்ற குறும்புத்தனத்தால் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது, என்று புலம்பவும் வைக்கிறார்.

 

சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள வரவு கிரேஸ் ஆண்டனி, நடிப்பு மற்றும் நகைச்சுவை இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார்.

 

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸின் திரை இருப்பு மற்றும் அவர்களது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.

 

விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி மற்றும் சில சிறுவர்கள் என தந்தை - மகன் பயணத்தில் தலை காட்டுபவர்களாக இருந்தாலும், பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.

 

இயற்கையின் சொர்க்கம் நியூசிலாந்தில் இல்லை, நம் பகத்திலேயே இருக்கிறது, என்பதை தனது கேமரா மூலம் நமக்கு புரிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். நாம் சாதாரணமாக கடந்து செல்லும் மலைகள், மரங்கள், குலங்கள், பழங்காலத்து சாலை மண்டபம் என அனைத்தையுமே ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கும் என்.கே.ஏகாம்பரம், படம் முடிந்த உடன் இருசக்கர வாகனத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்ளும் ஆவலை தூண்டுகிறார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் பாடல்களாக அல்லாமல் வசனங்களாக மனதை வருடுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நேர்த்தி.

 

படத்தொகுப்பாளர் மதி.வி.எஸ், அப்பா - மகன் உரையாடல்களையும், சிறு சிறு கதாபாத்திரங்களின் உரையாடல்களையும் பார்வையாளர்கள் கொண்டாடும்படி கச்சிதமாக தொகுத்திருக்கிறார். 

 

சோகமான பயணங்களை மட்டுமே படைப்பாக கொடுத்து வந்த இயக்குநர் ராம், முதல் முறையாக மகிழ்ச்சிகரமான பயணத்தை படைப்பாக கொடுத்திருப்பதோடு, படம் பார்ப்பவர்களை எதாவது ஒரு வகையில் படத்துடன் ஒன்றிணைக்க வைத்து விடுகிறார்.

 

பிள்ளைகளின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் உண்மையான உலகம் ஆகியவற்றுடன் நம்மையும் பயணிக்க வைத்து, வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், என்று நினைக்க வைக்கும் இயக்குநர் ராம், காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறார்.

 

"பறந்து போ" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : சிரிக்க, ரசிக்க ஏற்ற படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA