சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

croppedImg_251223203.jpeg

‘கிங்டம்’ விமர்சனம்

Directed by : Gowtam Tinnanuri

Casting : Vijay Deverakonda, Satyadev, Bhagyashri Borse

Music :Anirudh Ravichander

Produced by : Sithara Entertainments, Fortune Four Creations, Srikara Studios - Gowtam Tinnanuri

PRO : DOne

Review :

"கிங்டம்" கௌதம் தின்னனுரி இயக்கத்தில் சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ், பார்ச்சியுன் போர் கிரியேஷன்ஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் - கௌதம் திண்ணனுரி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அனிருத். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ் பாக்யஸ்ரீ போர்ஸ், வெங்கடேஷ், மனிஷ் சவுத்ரி, ஐயப்பா பி.சர்மா, பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான நாயகன் விஜய் தேவரகொண்டா, சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது அண்ணனை தேடும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் பற்றிய தகவல் ஒன்றை அவருக்கு தெரிவிக்கும் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி, அண்ணனை மீட்க வேண்டும் என்றால், இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் மாஃபியா கூட்டத்திற்குள் ரகசிய உளவாளியாக நுழைய வேண்டும் என்றும், அது மிகவும் ஆபத்தான பணி என்றும் கூறுகிறார்.

 

தனது அண்ணனை மீட்டு தனது அம்மா முன்பு நிறுத்த எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, ரகசிய உளவாளியாக இலங்கை மாஃபியா கூட்டத்திற்குள் நுழைகிறார். ஆனால், அங்கு நிலமை வேறு மாதிரியாக இருக்கிறது. அண்ணனை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இலங்கை செல்லும் விஜய் தேவரகொண்டா, ஒரு இனத்தையே மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அந்த இனத்திற்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ?, தனது அண்ணனை மீட்டாரா ? இல்லையா ? என்பதை ஆக்‌ஷன் மற்றும் மாஸாக சொல்வதே ‘கிங்டம்’.

 

கோபக்கார காவலர், முரட்டுத்தனமான கைதி, அதிரடி காட்டும் கடத்தல்காரன், ஒரு இனத்தை காக்கும் தலைவன் என பல பரிணாமங்களில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு பரிணாமங்களிலும் நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி செண்டிமெண்ட் காட்சிகளிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தியிருக்கிறார்.

 

விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் வேடத்தில் நடித்திருக்கும் சத்யதேவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு மிக்கதாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் ஹீரோவுக்கான முக்கியத்துவத்தில் மூழ்கி காணாமல் போய்விடுகிறது. இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்ட பணியை குறையின்றி செய்திருக்கும் சத்யதேவ் பார்வையாளர்கள் மனதில் சிவாவாக நின்றுவிடுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு வசீகரமான முகம். ஆனால், அவரது காதல் காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சியில் இருந்த முத்தக் காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது. அதனால், படத்தில் அவருக்கான வேலை பெரிதாக இல்லை. ஒருவேளை இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம்.

 

முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ், தேசிய பாதுகாப்பு துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மனிஷ் சவுத்ரி, பழங்குடி இன மக்களின் குருவாக நடித்திருக்கும் ஐயப்பா பி.சர்மா, இலங்கை மாஃபியாவாக நடித்திருக்கும் பாபுராஜ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் கிரிஸ் கங்காதரன் மற்றும் ஜோமன் டி.ஜான் ஆகியோர் படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. இலங்கை ராணுவத்துடானான சேசிங் உள்ளிட்ட படத்தின் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் தங்களது கேமரா மூலம்  பிரமிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், குறிப்பாக பின்னணி இசையும், மாஸ் காட்சிகளின் பீஜியமும் காட்சிகளுடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்கிறது. சாதாரண காட்சிகள் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் பின்னணி இசையமைத்திருக்கும் அனிருத், இசை இல்லை என்றால் படமே இல்லை என்று சொன்னாலும் மிகையாகாது.

 

படத்தில் எதை செல்லாம் ரகசியமாக சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் படத்தின் ஆரம்பத்திலேயே விளக்கமாக சொல்லும் வகையில் படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் நவீன் நூலி, அண்ணனை நாயகன் காப்பாற்றுவாரா ? இல்லையா ? என்ற முக்கிய காட்சியை கூட எவ்வித விறுவிறுப்பும் இன்றி தொகுத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.

 

அண்ணனை தேடும் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் என்ற எளிமையாக தொடங்கும் கதையை,  பெரும் குற்ற பின்னணி கொண்ட கும்பலின் சதி திட்டங்களை முறியடிக்கும் உளவாளி, இலங்கையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பழங்குடி இன மக்கள், அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கூட்டம், என்று திரைக்கதையின் விரிவாக்கத்தை மிக  பிரமாண்டமாக எழுதியிருக்கும் இயக்குநர் கௌதம் தின்னனுரி, பிரமிக்க வைக்கும் களங்கள் மற்றும் காட்சிகளோடு படத்தை இயக்கியிருக்கிறார். 

 

படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் கௌதம் தின்னனுரி, இலங்கை மாஃபியா கூட்டம் மற்றும் ஹீரோவின் உளவு வேலை ஆகியவற்றை எதிர்பார்ப்புடனும், சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நகர்த்தி செல்கிறார். இதே விறுவிறுப்பும், பரபரப்பும் இரண்டாம் பாதியில் காணாமல் போவது சற்று ஏமாற்றமாக இருந்தாலும், முடிவில் வேறு ஒரு பாதையில் கதையை பயணிக்க வைத்து, முடிவில்லை தொடக்கம் என்று சொல்லி பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

 

"கிங்டம்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் விறுவிறுப்பான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA